இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி  க்றைஸ்ட் சேர்ச்சிலுள்ள (Christchurch) ஹக்லே ஓவல் (Hagley Oval)  மைதானத்தில் இன்று இடம்பெற்றது.

5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியில் நாணயசுழச்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்படுத்தாட தீர்மாணித்தது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி வீரர்கள் அனைவரும் 20க்கும் குறைவான ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தமையால் 27.4 ஓவர்களுக்கு 117 ஓட்டங்களுக்கு சரிந்தது.

இந்த போட்டியில் 118 எனும் வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 8.2 ஓவர்களில் 118 ஓட்டங்களைப் பெற்று 10 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.

நியூசிலாந்து சார்பில் கப்டில் 30 பந்துகளில் 93 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்டார். இவர் 17 பந்துகளில் அரைச்சதம் கடந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பந்துவீச்சில் நியூசிலாந்து அணி சார்பாக ஹென்றி 4 விக்கெட்டுக்களையும் மெக்கிலங்கஹென் 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

போட்டியின் ஆட்டநாயகனாள கப்டில் தேர்வானார்.