அவுஸ்திரேலிய டென்னிஸில் பங்குபற்ற ஜோகோவிச்சுக்கு விசா வழங்கப்படும் : 3 வருட தடை நீக்கம்

Published By: Sethu

15 Nov, 2022 | 01:14 PM
image

சேர்பிய டென்னிஸ் நட்சத்திரமான நோவாக் ஜோகோவிச், அடுத்தவருடம் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் சுற்றுப்போட்டியில் பங்குபற்றுவற்காக விசா வழங்குவதற்கு அவுஸ்திரேலிய அரசாஙகம் தீர்மானித்துள்ளது.

கடந்த வருடம் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டிகளின்போது,  ஏற்பட்ட சர்ச்சைகளையடுத்து, அவர் நாடு கடத்தப்பட்டதுடன், அவுஸ்திரேலியாவுக்குள் நுழைவதற்கு 3 வருட தடையும் விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

35 வயதான ஜோகோவிச் உலகின் முன்னாள் முதல்நிலை வீரராவார்.  21 தடவைகள் ஒற்றையர் கிராண்ட் ஸ்லாம் சம்பியன் பட்டங்களை அவர் வென்றுள்ளார். இவற்றில் 9 அவுஸ்திரேலிய சம்பியன் பட்டங்களும் அடங்கும். தற்போது தரவரிசையில் 2 ஆவது இடத்தில் உள்ளார்,   

கடந்த வருடம் ஜனவரியில், அவுஸ்திரேலிய பகிரங்கப் போட்டிகளுக்காக, அப்போதைய நடப்புச் சம்பியனான ஜோகோவிச் அவுஸ்திரேலியாவுக்கு சென்றிருந்தார். ஆனால், அவர் கொவிட் 19 தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதமை சர்ச்சையை ஏற்படுத்தியது. 

 அவுஸ்திரேலிய அரசாங்கம் அவரை பல நாட்கள் தடுத்து வைத்திருந்த நிலையில், அவரின் விசாவையும் ரத்துச் செய்தது. இதற்கு எதிராக நீதிமன்றத்தில் ஜோகோவிச் தரப்பினால் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டது. அதன்பின் ஜோகோவிச் அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டார்.

அவுஸ்திரேலிய சட்டப்படி நாடு கடத்தப்பட்டவருக்கு 3 வருடங்கள் விசா வழங்க முடியாது. 

எனினும், நோவாக் ஜோகோவிச் மீதான தடையை அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் நீக்கவுள்ளார் என அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35