பெண் சிவில் செயற்பாட்டாளர்கள், பெண் பொலிஸார் மீதான தாக்குதல் ; பாரபட்சமின்றி தண்டனை வழங்குங்கள் - பிரதான எதிர்க்கட்சி தெரிவிப்பு

Published By: Vishnu

14 Nov, 2022 | 05:54 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

அமைதியான முறையில் எதிர்பினை தெரிவித்து பாதயாத்திரை மேற்கொண்ட இரண்டு பெண் சிவில் செயற்பாட்டாளர்களின் போராட்டத்திற்கு இடையூறு விளைவித்தமை மற்றும் அவர்களை கைது செய்தமை அவர்களின் அடிப்படை மனித உரிமை மீறும் செயற்பாடாகும்.

மேலும் இதன்போது இரண்டு பெண் கான்ஸ்டபிள்கள் மீது அங்கிருந்த பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் அவர்கள் இருவரின் கழுத்தை பிடித்து தள்ளும் செயற்பாடு வன்மையாக கண்டிக்கத்தக்கது எனவும் இது தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொண்டு சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிக்கு பாரபட்சமின்றி தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

திங்கட்கிழமை (14) எதிர்க்கட்சி அலுவலகத்தில்  நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ள வசந்த முதலிகே, சிறிதம்ம தேரரை விடுதலை செய்ய வலியுறுத்தி பெண்கள் இருவர் பாத யாத்திரை ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். 

பாத யாத்திரை மூலமாகவோ அல்லது பதாகைகளை ஏந்திய வண்ணம் அமைதியான முறையில் தமது எதிர்ப்பினை வெளியிடுவதற்கு நாட்டிலுள்ள அனைத்து சாதாரண பிரஜைகளுக்கும் உரிமை உள்ளது.

பாதயாத்திரை செல்ல முடியும், பதாகைகளை ஏந்திய வண்ணம் எதிர்ப்பில் ஈடுபட முடியும், கருத்துக்களை முன்வைக்க முடியும், இவை எல்லாம் நாட்டின் அரசியலமைப்பில் உள்ள அடிப்படை மனித உரிமைகளாகும். 

இருப்பினும் குறித்த இரண்டு பெண்களும் பாத யாத்திரை  முன்னெத்திருந்த வேளையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பொலிஸாரால் இடையூறு விளைவிக்க பட்டிருந்தது. பாதயாத்திரை தடுப்பதற்கு பொலிஸார் கடும் பிரயத்தனம் காண்பித்தனர். 

பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். குறித்த இரண்டு பெண்களின் அடிப்படை மனித உரிமைகள், கருத்து வெளிப்பாட்டு உரிமை  மீறப்பட்டுள்ளது. இது பாரியதொரு குற்றமாகும்.

மேலும் இதன் போது அவ்விடத்தில் இருந்த  இரண்டு பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்கள்  மீது அங்கிருந்த போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கழுத்தில் பிடித்து முன்னோக்கி செல்லும் காட்சிகள் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவாலகியிருந்தது.

இருப்பினும் இந்த சம்பவம் பெண்களை அகௌரவமாக நடத்துவதாக அமைந்துள்ளது. இந்நிலையில் பொலிஸ் அதிகாரிகள் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளோம். 

அறிக்கை சமர்ப்பிப்பதற்கு உள்ளோம் என்பதை கூறிக்கொண்டு இருக்கமால் வெளியாகியுள்ள புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை கருத்திற்கொண்டு உடனடியாக குறித்த பொலிஸ் அதிகாரிக்கு பாரபட்சமின்றி தண்டனை வழங்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 21:07:31