அரசாங்கத்தின் வரவு - செலவுத் திட்டமொரு புரியாத புதிர் -  ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி

Published By: Digital Desk 2

14 Nov, 2022 | 05:52 PM
image

(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்)

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை போன்று 2023 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தையும் புரிந்துக்கொள்ள முடியாமல் உள்ளது.

வரிக்கு மேல் வரி அதிகரிப்பை நாட்டு மக்களால் தாங்கிக் கொள்ள முடியாது என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (நவ. 14) திங்கட்கிழமை ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு  கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

அரச நிறுவனங்களை மறுசீரமைப்பது தொடர்பில் அரசாங்கம்வரவு - செலவுத் திட்டத்தின் ஊடாக விசேட கவனம் செலுத்தியுள்ளது.

ஶ்ரீலங்கன் எயர்லைன் உள்ளிட்ட லாபம் அடையும் நிறுவனங்களை மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுவது நெருக்கடிகளை அதிகரிக்கும்.

அத்துடன் அரச சேவையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை. அதேபோன்று வரிகள் மீது வரிகள் அறவிடும் வரவு - செலவுத் திட்டமாகவே இது காணப்படுகிறது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை புரிந்துக் கொள்ளவதை முடியாததை போன்று இந்த வரவு - செலவுத் திட்டத்தின் உள்ளடக்கங்களும் புரிந்துக் கொள்ள முடியாத நிலையில் உள்ளது.

குறுகிய காலத்தில் அரச வருமானத்தை ஈட்டிக் கொள்ளும் வகையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த வரவு - செலவுத் திட்டம் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து அவதானம் செலுத்தவில்லை.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக வரி அதிகரிப்பதாக அரசாங்கம் குறிப்பிட்டது,தற்போது வரவு - செலவுத் திட்டத்திலும் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது,வரிக்கு மேல் வரி அதிகரிப்பை நாட்டு மக்களால் தாங்கிக் கொள்ள முடியாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி

2024-04-16 14:42:04
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37