பாதுகாப்பு புரிந்துணர்வை வலுப்படுத்த பிரான்ஸ் இலங்கையுடன் பேச்சு 

Published By: Ponmalar

29 Nov, 2016 | 09:39 PM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

இரு நாடுகளுக்கிடையிலான  இரு தரப்பு தொடர்பு மற்றும் பாதுகாப்பு புரிந்துணர்வை வலுப்படுத்துவது தொடர்பிலான பேச்சுவார்த்தையினை இலங்கை பிரான்சுடன் முன்னெடுத்துள்ளது.  இந்து சமுத்திர பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரான்ஸ் கூட்டு கடற்படையின் கட்டளை அதிகாரி ரியர் எட்மிரல் டிடியர் பெலட்டோன் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தனவுடனான சந்திப்பின் போது இந்த விடயம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. 

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் இரு தரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புகள் தொடர்பாகவும் இரு நாட்டு பாதுகாப்பு  சார்ந்த உறவுகளை வலுப்படுத்துவது  குறித்தும் இதன் போது பரந்தளவில் கலந்துரையாடப்பட்டுள்ளது. 

அண்மைக்காலமாக கடல் பாதுகாப்பு சார்ந்த விடயங்களில் உலக நாடுகள் இலங்கையுடன் ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கான பேச்சுக்களை முன்னெடுத்து வருகின்ற நிலையில் பிரான்சும் இந்த விடயத்தில் ஆர்வம் காட்டி பேச்சுகளை முன்னெடுத்து வருகின்றது.

சமுத்திர பாதுகாப்பு தொடர்பான  காலி கலந்துரையாடல் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக டிடியர் பெலட்டோன் இலங்கைக்கு வருகை தந்துள்ள நிலையில் அவர் அரசாங்கத்தின் உயர் மட்டத்தினரையும் முப்படைகளின் தளபதிகளையும் சந்தித்து கலந்துரையாட உள்ளமை குறிப்pபிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14