2023 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டம் - நேரலை

14 Nov, 2022 | 05:11 PM
image

இலங்கை, புதியதோர் எதிர்காலத்தை நோக்கிய ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்கவின் 2023 ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்ட முழுமையன உரைக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்

https://cdn.virakesari.lk/uploads/medium/file/194828/77th_Budget_Speech-2023__Tamil_.pdf

  • நாம் கொண்டு வரும் பொருளாதார சீர்திருத்தங்கள், சர்வதேச நாணய நிதியத்துடன்  உடன்பாடு காணப்பட்ட சீர்திருத்தங்களுக்கு மட்டுப்படுத்தப்படவில்லை. சர்வதேச நாணய நிதியத்தால் முன்மொழியப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளன - ஜனாதிபதி

  • அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் உயர் திறன்களைக் கொண்ட சர்வதேச அளவில் போட்டித் திறன் கொண்ட பணியாளர்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் : ஜனாதிபதி 

  • பொது இணக்கப்பாடுடன் தேசிய  அபிவிருத்தி கொள்கையை உருவாக்குவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் : ஜனாதிபதி 

  • அடுத்த 10 ஆண்டுகளில் ஆண்டுதோறும் 03 பில்லியன் டொலர்கள் அந்நியச் செலாவணியை  நேரடி முதலீடாக  பெறுவதற்கான திட்டங்கள்  : ஜனாதிபதி 

  • பொதுச் செலவினங்களைக் கடுமையாகக் கட்டுப்படுத்த பல சுற்றறிக்கை அறிவுறுத்தல்கள் : ஜனாதிபதி
  • ஏற்றுமதி நோக்கங்களுக்காக கஞ்சா  உற்பத்தியை ஆராய்வதற்காக விசேட குழு நியமிக்கப்படும் : ஜனாதிபதி 

  • ஆயுதப்படையினருக்கு  முன்கூட்டியே ஓய்வுபெற அனுமதிக்கப்படுகிறது. 18 வருட சேவைக்குப் பிறகு ஓய்வுபெறும் வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இது கட்டாயம் அல்ல, விரும்புபவர்கள் மட்டுமே ஓய்வு பெறலாம் : ஜனாதிபதி 

  • 2023 இறுதிக்குள் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கணிசமான நிவாரணம் வழங்கலாம் என நினைக்கிறோம்.அதற்குள் தனியாருக்கு நிவாரணம் வழங்குவோம் என நம்புகிறோம் : ஜனாதிபதி 

  • 2023-2032  காலப்பகுதியில்  புதிய ஏற்றுமதிகளின் ஊடாக   03 பில்லியன்  டொலர் வருடாந்த வருமான அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது : ஜனாதிபதி 

  • கடவுச்சீட்டு மற்றும் வீசா  கட்டணம் உட்பட குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தொடர்பான பல கட்டணங்கள் அதிகரிக்கப்படும் : ஜனாதிபதி 

  • சர்வதேச வர்த்தகத்தை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 100 % ஆக  அதிகரிப்பதற்கான நடவடிக்கை : ஜனாதிபதி

  • சமூக சந்தைப் பொருளாதாரத்தின் மூலம் 7% - 8% உயர் பொருளாதார வளர்ச்சியை அடைய எதிர்பார்க்கப்படுகிறது : ஜனாதிபதி

  • 2023 ஜனவரி முதல் பல இறக்குமதி வரிகள் படிப்படியாகக் குறைக்கப்படும் அல்லது ரத்து செய்யப்படும் : ஜனாதிபதி

  • பொருளாதார மாற்றத்திற்குத் தேவையான சட்ட திருத்தங்கள் மற்றும் புதிய சட்டங்கள் என்பன விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்  : ஜனாதிபதி

  • உலகளாவிய போக்கைக் கருத்தில் கொண்டும் குறிப்பாக காலநிலை மாற்றம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தியும் சமூக பொருளாதார மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் : ஜனாதிபதி

  • சுற்றுச்சூழலுக்கு உகந்த பச்சை மற்றும் நீலப் பொருளாதாரம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் என்பன தொடர்பில் புதிய பொருளாதாரத்தின் கீழ் விசேட கவனம் : ஜனாதிபதி

  • அரச ஊழியர்களுக்கு  2023 ஆண்டு இறுதியில் சலுகைகள் வழங்க நடவடிக்கை, தனியார் துறைக்கும் வழங்க ஆலோசனை : ஜனாதிபதி

  • இலங்கையின் வரலாறு மற்றும் ஆராய்ச்சிக்கான நிறுவனம் ஒன்றை நிறுவுவதற்கு 50 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும் : ஜனாதிபதி

  • தனியார் துறை ஊழியர்களுக்கான காப்புறுதி நிதியமொன்றை ஏற்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. அரச ஊழியர்களுக்கான அக்ரஹார காப்புறுதி சலுகைகள் போன்று தனியார் துறையினருக்கும் அத்தகைய காப்புறுதி வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது : ஜனாதிபதி 

  • அரச வருவாயில் பெரும் பகுதி அரச உத்தியோகத்தர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுக்கே  செலவிடப்படுவதால் அபிவிருத்திப் பணிகளுக்குப் பணத்தை ஒதுக்குவது சவாலாகியுள்ளதால்  தற்போதைய தேவைக்கேற்ப அரச சேவைகளை வழங்க ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்படுகிறது : ஜனாதிபதி 

  • பல்கலைக் கழகங்களில் உயர்கல்வி பெறும் 75 மாணவர்களுக்கு, வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் முதுகலைப் பட்டப்படிப்பை படிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது : ஜனாதிபதி

  • உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெறும் 75 பேருக்கு 75 வெளிநாட்டுப் பல்கலைக்கழக புலமைப்பரிசில்கள். இதற்கான நிதி ஜனாதிபதி நிதியிலிருந்து ஒதுக்கப்பட்டுள்ளது : ஜனாதிபதி

  • ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட போட்டித்தன்மைமிகு பொருளாதாரம் : ஜனாதிபதி

  • கிராமப்புற பாடசாலைகளின் வசதிகளை மேம்படுத்த 200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு : ஜனாதிபதி 

  • தனியார் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கவும் புதிய தொழில் முயற்சியாளர்களை உருவாக்கவும் தேவையான வசதிகள் வழங்கப்படும். அவர்களின் பணியை மேலும் திறம்படச் செய்யும் வகையில் கொள்கைகள்  தயாரிக்கப்படும் : ஜனாதிபதி

  • வறிய  மற்றும் நலிவடைந்த குழுக்களைப் பராமரிப்பது தொடர்பில் முழுமையான கவனம் செலுத்தப்படுமென ஜனாதிபதி தெரிவிப்பு

  • தகவல் பாதுகாப்பு அதிகார சபை உருவாக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

  • அரச சேவை துறையை முழுமையாக மீளாய்வு செய்வதற்கு ஜனாதிபதி  ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படும் : ஜனாதிபதி

  • யாழ்ப்பாணம், பேராதெனிய, ருஹுணு பல்கலைக்கழங்களின் மருத்துவ மேற்படிப்புக்களை ஆரம்பிக்க 60 பில்லியன் ரூபா ஒதுக்கீடு : ஜனாதிபதி

  • உலகின் புதிய போக்குகளுக்கு ஏற்றவாறு புதிய பொருளாதார அடித்தளத்தை தயாரிக்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவிப்பு 

  • பல்துறைசார் சுற்றுலாத்துறை மேம்பாட்டிற்காக 50 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணிவிக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

  • தனிநபர் வருமானத்திற்கு ஏற்ற வாழ்க்கை முறைக்குப் பதிலாக இளைஞர்கள் எதிர்பார்க்கும் வாழ்க்கை முறைக்கு  உகந்த வகையில் தனிநபர் வருமானத்தை  அதிகரிப்பதற்கான புதிய பொருளாதார முறைமை : ஜனாதிபதி

  • பரீட்சயமான சமூக வாழ்க்கை முறையானது மீண்டும் கீழ்மட்டத்திற்கு வீழ்ச்சியடையாத வகையில் புதிய பயணம் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

  • தாய்லாந்துடன் பொருளாதார - வர்த்தக  உறவுகளை வலுப்படுத்தவும் சிங்கப்பூருடனான வர்த்தக உறவுகளை மேம்படுத்தப்படுத்தவும் தீர்மானம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு

  • இளைஞர்களின்  சிறந்த எதிர்காலத்திற்காக,  ஆர்ப்பாட்டங்கள் , போராட்டங்கள்,   வேலைநிறுத்தங்கள் போன்ற பாரம்பரிய அரசியல் முறைகளுக்கு அப்பாற்பட்ட புதிய வேலைத்திட்டங்கள், புதிய அணுகுமுறையின் மூலம் ,இளைஞர்களின்  எதிர்காலத்திற்கு உகந்த புதிய பொருளாதாரத்தை உருவாக்குவோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு

  • நாட்டின் நீண்டகால (2023-2048) அபிவிருத்தி, பிரபலமான தீர்மானங்களில் அன்றி, சரியான தீர்மானங்களை அடிப்படையாகக் கொண்டது. வரவு செலவுத் திட்ட உரையில் ஜனாதிபதி தெரிவிப்பு.

  • முதலீட்டு சபையும் தேசிய ஏற்றுமதி சபையும் தோல்வியடைந்தமையே  சர்வதேச முதலீடுகளின்மைக்கு காரணம் : இவற்றை மேம்படுத்த 100 மில்லியன் - ஜனாதிபதி

  • 8.3 வீதமாக உள்ள தேசிய மொத்த வருமானத்தை 2025 ஆண்டில்  15 வீதமாக அதிகரிக்க நடவடிக்கை : ஜனாதிபதி

  • உலகிற்கு கடனாளியாகி விருந்துபசாரம் நடத்த இனியும் முடியாது என ஜனாதிபதி தெரிவிப்பு

  • சமூக பாதுகாப்பு திறந்த பொருளாதார கொள்கையின் ஊடாக அடுத்த 10 ஆண்டுகளில் 7 வீத பொருளாதார வளர்ச்சியும் 10 பில்லியின் நேரடி சர்வதேச முதலீடுகளும் இலக்காக உள்ளது என ஜனாதிபதி தெரிவிப்பு.

  • போட்டிச் சந்தை வாய்ப்புகள், இயற்கை பொருளாதாரம், தொழில்நுட்ப வர்த்தகம், ஆகிய துறைகளில் புதிய பொருளாதார கொள்கைகள் :  ஜனாதிபதி 

  • புதிய பொருளாதார சித்தாந்தத்தை உருவாக்குவதற்கான புதிய பயணத்தை உருவாக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

  • 52 அரச நிறுவனங்களினால் வருடாந்தம் 86 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படுகின்றது என ஜனாதிபதி தெரிவிப்பு.

  • பிரபலமான தீர்மானங்களை விட  நாட்டிற்கு சாதகமான தீர்மானங்களே இன்று அவசியமாகின்றன என குறிப்பிட்டார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

  • இந்தியா மற்றும் சீனாவுடனான கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கையுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

  • 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பிக்க ஜனாதிபதியும் இலங்கையின்  23 ஆவது நிதி அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன்னர் பாராளுமன்றத்திற்கு வருகை 

  • இன்று திங்கட்கிழமை (14) பிற்பகல் 1.30 மணிக்கு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து  உரையாற்றவுள்ளார்.

  • 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை ஜனாதிபதியும் இலங்கையின்  23 ஆவது நிதி அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க இன்று திங்கட்கிழமை (14) பிற்பகல் 1.30 மணிக்கு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து  உரையாற்றவுள்ளார்.

  • இம்முறை வரவுசெலவுத் திட்டத்தில் புதிய நிதிச் சீர்திருத்தங்கள் மீது கவனம் செலுத்தப்படுவதுடன் புதிய வரிகள் அறிவிக்கப்படலாம்.

  • பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்கான திட்டங்கள் அறிவிக்கப்படலாம்.

  • 2.9 பில்லியன் நிதி உதவியை இலங்கைக்கு வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் விதித்த நிபந்தனைகளுக்கு இணங்க துண்டு விழும் தொகையை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44