இலங்கையில் மார்பக புற்றுநோய்க்கு கிடைக்கக்கூடிய மிகச் சிறந்த சிகிச்சை முறைகள் எவை ?

Published By: Ponmalar

14 Nov, 2022 | 03:53 PM
image

வைத்திய கலாநிதி. சிவப்பிரகாசம் அனுஷ்யந்தன்.
இலங்கை தேசிய வைத்தியசாலை. 
கொழும்பு 10.

மார்பகத்ததிலே கட்டிகளைக் கொண்ட எல்லா பெண்களுக்கும் கடந்த வாரம் குறிப்பிடப்பட்ட இந்த எல்லாப் பரிசோதனை முறைகள் மற்றும் அதற்குரிய நடைமுறைகள் அனைத்தும் தேவை இல்லை. உங்கள் குடும்ப மருத்துவர். உங்களுக்கு ஏற்பட்டுள்ள குறிப்பிட்ட சூழ்நிலையின் அடிப்படையில் பொருத்தமான பரிசோதனை முறைகளைத் தேர்ந்தெடுப்பார். அதே நேரம். நீங்கள் அனுபவிக்கும் புதிய மார்பகம் சம்பந்தமான அறிகுறிகளையும் கணக்கில் எடுத்துக் கொள்வதன் மூலம் இப் பரிசோதனை முறைகள். தீர்மானித்துக் கொள்ளப்படுகின்றன. 

மார்பகப் புற்றுநோயின் நோய் நிலைகள் எவை?

மார்பகப் புற்றுநோயின் நோய் நிலைகள், பூஜ்யம் முதல் நான்கு வரையிலான நிலைகளினால் வர்ணிக்கப்படுகின்றன.  

நிலை 01 - மார்பகத்தினுள் எந்த இடத்தையும் ஆக்கிரமிக்காத அல்லது தாய்ப்பால் சுரக்கும் சுரப்புக் குழாய்களுக்குள் இருக்கும் புற்று நோயை குறிப்பிடுகின்றது 

நிலை 04 - மார்பக புற்றுநோய் என்பது உடலிலே பல இடங்களுக்கும் பரவிய நிலையில் “மெடாஸ்டெட்டிக்” மார்பகப் புற்றுநோய் என்றும் அழைக்கப்படுகின்றது இது உடலின் மற்ற அங்கங்களுக்கும் பரவிக் காணப்படும்; புற்றுநோய் நிலைகளைக் குறிக்கின்றது. குறிப்பாக ஈரல், சுவாசப் பைகள்இ எலும்பு மச்சை, மூளை போன்ற முக்கியமான அங்கங்களுக்கு பரவி இருக்கின்ற நிலையை இது உறுதி செய்கின்றது இது மார்பக புற்றுநோயின் மிக இறுதி நிலையிலேயே வெளிக்காட்டப் படுகின்றது அல்லது கண்டறியப்படுகின்றது அல்லது மார்பக புற்றுநோயின் தாக்கத்திற்கு உட்பட்ட பெண்களினால், தன்னுடைய குடும்பத்தினர்களுக்கு அல்லது அவர்களது கணவன்மார்களுக்கு சொல்லப் படுகின்றது. 

மார்பகப் புற்று நோய்ச் சிகிச்சையில், ஈஸ்ரோஜன் ரிஸப்டர்களின் பங்கு என்ன?

மார்பக புற்றுநோய் சிகிச்சைகளின் போதுஇ உங்கள் மார்பகக் கட்டிகளில் காணப்படும், ஈஸ்ரோஜன், புரோஜஸ்ரோஜன் மற்றும் HER – 2 போன்ற சுரப்பிகளின் ரிஸப்டர்கள் அல்லது ஏற்பிகள், உங்கள் புற்றுநோயின் நோய் நிலையை தீர்மானிப்பதில், கணக்கில் எடுத்துக் கொள்கின்றது. ஈஸ்ரோஜன், புரோஜஸ்ரோன் மற்றும் ஹேர் 02 போன்ற இரசாயன பதார்த்தங்களுக்கான ஏற்பிகளின் அளவு அல்லது ரிசப்டர்கள் போன்றவை, கட்டிகளைக் குறிக்கின்ற Tumour Markers எனப்படும் குறிப்பான்கள் இருப்பது, மேலதிக சிகிச்சை நிலையை தீர்மானிப்பதற்கு உதவி செய்கின்றது. 

மார்பக புற்று நோய்ச் சிகிச்சைக் குழுவில் அங்கம் வகிப்பவர்கள் யார்?

சாதாரணமாக ஒரு மார்பகப் புற்றுநோய்ப் பராமரிப்பு கிளினிக்கில் பல்வேறு வகையான வைத்திய குழுவினர் அங்கம் வகிப்பர். அவர்களானவர்கள் - 

  • புற்றுநோய் சிகிச்சை நிபுணர்.
  • சத்திர சிகிச்சை நிபுணர்.
  • உளவள ஆலோசகர்.
  • சமூக சேவை இணைப்பாளர்.
  • மூத்த தாதிய பரிபாலகி.
  • இயன் மருத்துவமனை பயிற்சியாளர் போன்ற பல்வேறு பிரிவினர் அங்கம் வகிப்பர். 

உங்கள் மார்பக புற்றுநோய்ச் சிகிச்சை தொடர்பான உடல் நல, மனதில் எழும் கவலைகளுக்கு, அவர்கள் உங்களுடைய சந்தேகங்களுக்கு, தகுந்த பதில் அளித்து விஞ்ஞான ரீதியான விளக்கங்களை அளித்து, உங்களை ஆசுவாசப்படுத்தி தேவையான விளக்கங்களை உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் வழங்குவதற்கு அவர்கள் எப்பொழுதும் தயாராக இருப்பார்கள்.

ஒரு சாதாரண மார்பக புற்றுநோயைக் கொண்ட பெண்ணுக்கு, உங்களுக்கு சிகிச்சை அளிக்க முன்னர் பின்வருவன கவனத்தில் கொள்ளப்படுகின்றன.

  • உங்களுடைய மார்பக புற்றுநோயின் நோய் நிர்ணய நிலை.
  • மார்பகப் புற்று நோயினுடைய வகைகள்.
  • உங்களுக்கு ஏதாவது பிற நோய்கள் உள்ளனவா போன்ற தகவல்கள்.
  • கிடைக்கக்கூடிய  புற்றுநோய்ச் சிகிச்சை முறைகள்.
  • உங்கள் மார்பக புற்றுநோயின் இழைய மற்றும் கலங்களின் வகைகள், அதன் நிலை, அதன் தரம், அளவு.
  • புற்றுநோய்க் கலங்கள் ஹார்மோன்களின் உணர் திறனுடன் உள்ளனவா? போன்றவற்றை  அடிப்படையாகக் கொண்டே, உங்கள் மார்பக புற்றுநோய் சிகிச்சை விருப்பங்களை உங்கள் மருத்துவர் தீர்மானிக்கின்றார்.

உங்கள் மருத்துவர் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் உங்கள் சொந்த விருப்பங்களையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளுகின்றார். 

மார்பகப் புற்று நோய்க்கான பொதுவான சிகிச்சை முறைகள் எவை?

  • பெரும்பாலான பெண்கள் மார்பக புற்றுநோய்க்கான, அறுவை சிகிச்சைக்கே உட்படுத்தப்படுகின்றனர். 
  • பலர், அறுவை சிகிச்சைக்கு பிறகு, இரசாயன சிகிச்சை எனப்படுப்படும் Heamotherpy க்கு உட்படுத்தப்படுகின்றனர். 
  • தேவைப்படுமிடத்து ஹோர்மோன்களின் உணர்திறனைப் பொறுத்து, ஹார்மோன சிகிச்சைகள் குறைந்தது ஐந்து வருட காலங்களுக்குப் பரிந்துரை செய்யப்படுகின்றன. 
  • தேவைப்படுமிடத்து, கதிர்வீச்சு போன்ற கூடுதல் சிகிச்சைகளும் பரிந்துரை செய்யப்படுகின்றன. இவைகள், அந்த மார்பக புற்றுநோய்களின் வகைகளின் தன்மையைப் பொறுத்து அமைகின்றன.
  • சில சூழ்நிலைகளில், அறுவை சிகிச்சைக்கு முன்னதாகவே, ஹீமோதெரபி எனப்படுகின்ற, இரசாயன மருந்துகளை குருதி நாளங்கள் மூலம் உட்செலுத்தி புற்றுநோய்க் கலங்களைக் கொல்லுகின்ற அல்லது செயலிழக்கச் செய்கின்ற சிகிச்சை முறைகள் பயன்படுத்தப்படலாம். 
  • மார்பக புற்றுநோய் சிகிச்சைக்கு, பல விருப்பு முறைகள்  உள்ளன. மேலும், உங்கள் சிகிச்சை பற்றிய சிக்கலான முடிவுகளை எடுக்கும் போது, நீங்கள் இது சம்பந்தமாக அதிகமாக அறிவைப் பெற்றுக் கொள்ள முடியும். மார்பக புற்றுநோய்ச் சிகிச்சை மையத்தில் உளவள ஆலோசகர்களிடம் நீங்கள் இரண்டாவது கருத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். 
  • மார்பகச் சிகிச்சை முறைகளைக் கடந்து சென்ற அல்லது அதே முடிவை எதிர்கொண்ட மற்ற பெண்களுடன் பேசுவதன் மூலம் நீங்கள் ஏராளமான நேர் தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.  அவர்களுடைய கவலைகள், மன உள்ளக் கிடக்கைகள், அவர்கள் இந்த போராட்டத்தில் இருந்து எவ்வாறு வெளியே வந்தார்கள் போன்றவற்றை எல்லாம் நீங்கள் அவர்களுடன் மனம் விட்டு பேசுவதன் மூலம் அறிந்து கொள்ளலாம். 
  • மார்பகப் புற்று நோய்க்கு கிடைக்கக்கூடிய அறுவை சிகிச்சை முறைகளுக்கு மேலதிகமாக மார்பக மறுசீரமைப்பு சத்திர சிகிச்சை தற்போது நிறைய அரசாங்க வைத்திய சாலைகளில் கூட கிடைக்கின்றன. 
  • மிக எளிய மார்பக அழற்சிக்கு உட்பட்ட பெண்களுக்கு,  மார்பகத்தில் காணப்படுகின்ற கட்டிகளை மட்டும் வெட்டி அகற்றுகின்ற முறை, தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. 
  • பாதிக்கப்பட்ட மார்பகத்தை, சத்திர சிகிச்சை மூலம், பூரணமாக அகற்றிக் கொள்ளுதல். இதன் மூலம் அந்தப் பகுதிக்கு உரிய அக்குளில் காணப்படுகின்ற நிணநீர் முடிச்சுகளும் பாதைகளும் பூரணமாக அகற்றப்படுகின்றன. மார்பக புற்று நோய்க்கான கதிர்வீச்சு சிகிச்சை மார்பக புற்றுநோய்க்கான கதிர்வீச்சு சிகிச்சையானது
  • மார்பகத்தில் காணப்படுகின்ற மார்பகக் கட்டியை மட்டும் நீக்குகின்ற பொறிமுறையை, Lumpectomy என்கின்ற வார்த்தை மூலம் குறிப்பிடப்படுகின்றது. இங்கே அந்த பாதிக்கப்பட்ட மார்பகமானது பூரணமாக  பாதுகாக்கப்பட்டு, அறுவை சத்திர சிகிச்சை மூலம் அந்த கட்டிகள் மட்டுமே அகற்றப்படுகின்றன. இந்த அறுவை சிகிச்சையின் போது, நிபுணர் அந்த சந்தேகத்திற்குரிய மார்பக புற்றுநோய் கட்டியையும் சுற்றியுள்ள ஆரோக்கியமான இழையங்களின் சிறிய விளிம்பையும் கூட அகற்றுகின்றார். சிறிய கட்டிகளை அகற்ற இம்முறையானது, பரிந்துரைக்க படலாம். பெரிய கட்டிகளைக் கொண்ட சிலர், அறுவை சிகிச்சைக்கு முன்னதாக, ஹீமோதெரபி எனப்படுகின்ற ரசாயன பதார்த்தங்களை ஊசி மூலம் செலுத்தி கொள்வதன் மூலம், புற்றுநோய்க் கட்டிகளின் அளவை சுருக்கிக்கொள்ள முடிகின்றது இதனால் லம்பெக்டமி எனப்படுகின்ற சத்திர சிகிச்சைச் செயல்முறை மூலம் அந்த கட்டிகளை முழுமையாக அகற்ற முடிகின்றது. முழு மார்பகத்தையுமே அகற்றுகின்ற சத்திர சிகிச்சை, மஸ்டேக்டமி என்று கூறப்படும்.

பல்வேறு வகையான சிகிச்சை முறைகள் காணப்பட்டாலும் இயற்கையான அழகோடு வாழ்வதற்கு ஒப்பாகாது. எனவே வருமுன் காப்பதே சிறந்தது. இதற்கு மிகச்சிறந்த வழிஇ பெண்ணானப் பிறந்த எல்லோரும், சுய மார்பகப் பரிசோதனையை மேற்கொள்வதே, எங்கள் முன் காணப்படும் ஒரே ஒரு தெரிவாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29
news-image

ஒஸ்பெர்ஜர்'ஸ் சிண்ட்ரோம் எனும் குழந்தைகளுக்கான வளர்ச்சி...

2024-04-04 14:17:36
news-image

அதிரோஸ்கிளிரோசிஸ் எனும் ரத்த நாளத் தடிப்பு...

2024-04-03 16:12:32
news-image

ட்ரைஜெமீனல் நியுரால்ஜியா எனும் முக நரம்புகளில்...

2024-04-05 09:27:49