வெந்நீரில் நீராடுவது ஆரோக்கியமானதா..? பச்சை தண்ணீரில் நீராடுவது ஆரோக்கியமானதா..?

Published By: Digital Desk 2

14 Nov, 2022 | 12:03 PM
image

(டொக்டர் வேணி)

மழைக்காலம், குளிர்காலம், பனிக்காலம், கோடை காலம் என எந்த பருவ நிலையிலும் எம்மில் பலருக்கும் எந்த நீரில் நீராடுவது ஆரோக்கியமானது என்பது குறித்த முழுமையான புரிதல் இல்லை.

சுகமில்லை என்றாலோ.. அல்லது சோம்பல் காரணத்தினாலோ.. எம்மில் பலரும் தற்காலிகமான நிவாரணத்தையும், புத்துணர்வையும் அளிக்கும் சுடுநீரில் நீராடுகிறார்கள்.

இவை உடல் ரீதியான பாதிப்பு ஏற்பட்டு, மருத்துவர்களின் பரிந்துரையில் மேற்கொள்பவர்களுக்கு எந்தவித அசௌகரியத்தையும் உண்டாக்குவதில்லை.

ஆனால் மாற்று மருத்துவம், நீங்கள் எந்த பருவ நிலையில் இருந்தாலும் பச்சை தண்ணீரில் நீராடுவது தான் ஆரோக்கியமானது என பரிந்துரைக்கிறது.

இதனை உறுதியாக பின்பற்றுமாறும் வலியுறுத்துகிறது. அத்துடன் இதற்கான மருத்துவ ரீதியிலான காரணத்தையும் முன்வைக்கிறது.

பணியிட சூழலில் வெப்பநிலை, இயல்பான நிலையை விட சற்று கூடுதலாக இருந்தால்..., அவை ஊழியர்களின் பணித்திறனைப் பாதிக்கும்.

ஏனெனில் இதன் போது எம்முடைய உடலிலிருந்து வியர்வை வெளியாகும். கவனம் அதன் மீது திரும்பும். இதனால் மனித வளத்தை முழுமையாக பயன்படுத்த இயலாத சூழல் உருவாகும்.

அதே தருணத்தில் எம்முடைய பணியிட சூழல் சற்று குளிர்ச்சியானதாக இருந்தால், மனம் உற்சாகத்துடன் பணியாற்றும். இதன் காரணமாக எம்முடைய உடல் எப்போதும் சற்று கூடுதலான வெப்பநிலையை விட, சற்று கூடுதலான குளிர் நிலையை தான் விரும்புகிறது. ஏற்றும் கொள்கிறது.

எம்முடைய மூளை பகுதியின் இயக்கத்திற்கு பேருதவி புரியும் நியூட்ரோ ட்ரான்ஸ்மீற்றர் எனப்படும் மின்னாற்றல் மண்டலம் குளிர்ந்த நீரில் குளிக்கும் போது 500 மடங்கிற்கு மேலாக புத்துணர்ச்சி அடைகிறது.

இதன் காரணமாக மனத்தையும், உடலையும் உற்சாகமாக வைத்திருக்கும் ஹோர்மோன் சுரப்பிகள் தங்களுடைய இயங்கு திறனின் முழுமையாக செயல்படுகிறது. மேலும் குளிர்ந்த நீரில் குளிப்பதால் எம்முடைய நோய் எதிர்ப்பு மண்டலம் வலிமை அடைகிறது. இதன் காரணமாக ஓட்டோ இம்யூன் டிஸீஸ் எனப்படும் நோய் எதிர்ப்பு மண்டலம் ஆரோக்கியமான திசுக்களை பாதிக்கும் தன்மை குறைகிறது.

மன அழுத்தத்தை உண்டாக்கும் சில ஹோர்மோன் சுரப்பிகள் குளிர்ந்த நீரில் நீங்கள் குளிப்பதால் அவற்றின் இயங்கு திறனில் சமச்சீரற்ற தன்மை உருவாகி, மன அழுத்த பாதிப்பை உண்டாக்குவதிலிருந்து விலகுகிறது.

மேலும் இன்சுலின் சுரப்பின் கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் சர்க்கரை நோயாளிகள் தொடர்ச்சியாக பச்சை தண்ணீரில் நீராடினால் நிவாரணம் கிடைக்கும் என்று அண்மைய ஆய்வில் கண்டறியப்பட்டிருக்கிறது. இதன் போது இன்சுலின் சுரப்பியின் இயங்கு திறன் தூண்டப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

எம்முடைய ரத்த நாள அமைப்பின் இயங்கு திறனை கட்டுப்படுத்தும் தானியங்கி நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகள், பச்சை தண்ணீரில் குளிப்பதால் சீராக இயங்குகிறது என்றும் கண்டறியப்பட்டிருக்கிறது. அதாவது ரத்த அழுத்த பாதிப்பு, உயர் குருதி அழுத்த பாதிப்பை குறைவதாகவும், இதயத்துடிப்பபை சீரான முறையில் இயங்கும் வகையில் வைத்திருப்பதாகவும் தெரிவிக்கிறார்கள். மேலும் எம்முடைய செல்களின் வலிமைக்கும், மரபணுக்களின் ஆரோக்கியத்திற்கும் பச்சைத் தண்ணீரில் குளிப்பது தான் சிறந்தது என நிபுணர்கள் பரிந்துரைத்திருக்கிறார்கள்.

- தொகுப்பு அனுஷா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04