அரச உத்தியோகத்தர்களின் ஓய்வு வயது 60 ஆக மட்டுத்தப்படும் : 5 தூதரக அதிகாரிகளுக்கு சேவை நீடிப்பு வழங்க ஜனாதிபதி மறுப்பு

Published By: Digital Desk 5

13 Nov, 2022 | 09:16 PM
image

அரச ஊழியர்களுக்கு 60 வயதுக்கு மேல் சேவை நீடிப்பு வழங்கப்படமாட்டாது என்பதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாகதெரிய வருகிறது.

அந்த வகையில் ஐந்து தூதரக அதிகாரிகளுக்கு சேவை நீடிப்பு வழங்குமாறு கோரி வெளிவிவகார அமைச்சு விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி நிராகரித்து விட் டதாக தகவல்கள் கூறுகின்றன.

இதில் நான்கு தூதுவர்களும் ஒரு உயர் ஸ்தானிகரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஒருவர் ஏற்கனவே 60 வயதை அடைந்து விட்டார் எனவும் ஏனைய நான்கு பேரும் அடுத்த வருடம் 60 வயதை அடைய வுள்ள தாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை   இதர பல்வேறு அதிகாரிகள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு முன்வைத்த கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

மேலும் வெளிநாட்டு அலுவல்கள் சேவையில் நியமிக்கப்படும் அதிகாரிகள் 60 வயதை அடைந்தவுடன் அவர்களை சேவையில் இருந்தும் ஓய்வு பெற செய்யும் வகையில் நடவடிக்கைகள் தொடரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன் அடிப்படையில் றியாத் தூதுவரான பி.எ ம் .ஹம்சா, பிரசல்ஸ் தூதுவரான கிரேஸ் ஆசீர்வாதம், ஓமான் தூதுவரான சபருல்லாகான் , வார்சோ தூதுவரான எஸ்.டி.கே சேமசிங்க மற்றும் மாலைதீவு உயர் ஸ்தானிகராக ஏ.எம்.ஜே.சாதிக் ஆகியோருக்கே சேவை நீடிப்பு வழங்க ஜனாதிபதி மறுத்து விட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வெளிவிவகார அமைச்சு விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் தனது சேவைக்காலத்தை நிறைவு செய்யும் வகையில் ஹம்ஸாவுக்கு 2024 அக்டோபர் வரையிலும் ஆசீர்வாதத்துக்குஜூன் 2023 வரையிலும் திருமதி. சமரசிங்கவுக்கு  ஜூன்   2024 வரையிலும், 

ஏ .எ ம் .ஜே . சாதிக்குக்கு ஜனவரி 2025 வரையிலும், கானுக்கு செப்டம்பர் 2025 வரையிலும்சேவை நீடிப்பு  வழங்குமாறு கோரப்பட்டிருந்தது.

இதேவேளை இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் சேவையின் குறைந்த எண்ணிக்கையான தொழில் வல்லுநர்களே காணப்படுவதாகவும் தற்பொழுது சுமார் 50 பேர் அளவிலேயே இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21