அரசியல் பிரச்சினைக்கு தீர்வுகாணாது பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது - சரித்த ஹேரத்

Published By: Digital Desk 5

14 Nov, 2022 | 09:30 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டின் அரசியல் மற்றும் பாெருளாதாரம் ஒன்றுக்கொன்று பின்னிப்பிணையப்பட்டது. அதனால் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணாமல் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது என எதிர்க்கட்சி உறுப்பினர் ஷரித்த  ஹேரத் தெரிவித்தார்.

சுதந்திர மக்கள் காங்கிரஸின் சுதந்திரத்திற்கு முன்னோடியாக அரசியல் மறுசீரமைப்பு மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கான மூலாேபாய திட்டம் கொள்கை பிரகடன புத்தக வெளியீடு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டு மக்களுடன் கலந்துரையாடி நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொள்ளவேண்டும் என நாங்கள் தீர்மானித்தோம். 

அதன் ஆரம்ப நிகழ்வாக அரசியல் மறுசீரப்பு மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கான மூலாேபாய கட்டமைப்பு ஆகிய  கருத்துக்களம் புத்தகங்கள் இரண்டை வெளியிட்டிருக்கின்றோம். 

நாங்கள் மிகவும் பிரச்சினைக்குரிய காலகட்டத்திலேயே இருக்கின்றோம். பொருளாதார பிரச்சினை, அரசியல் நெருக்கடிக்கு மத்தியிலேயே இருந்து வருகின்றோம். 

அரசியல் பிரச்சினையை இனம் காணாமல் பொருளாதார நெருக்கடியில் இருந்து எங்களால் மீள முடியாது. 

அதனால் பின்னிப்பிணைந்திருக்கும் அரசியல்,  பொருளாதாரம் என்ற பிரச்சினையில் இருந்து மீள்வதற்கான   வேலைத்திட்டத்தையே நாங்கள் ஆரம்பித்திருக்கின்றோம்.

அத்துடன் எமது இந்த வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக மாற்றுவதற்கு ஊழல் மோசடிகளை ஒழித்து, அரசியல் பொருளாதாரம் கலந்த அரசியல் பயணத்தை நாங்கள் மேற்கொள்ளவேண்டும். 

நாடு சுதந்திரமடைந்தது முதல் பல பொருளாதார மூலாேபாய திட்டங்கள் அரசியலமைப்பு மறுசீரமைப்புகளை மேற்காெண்டிருக்கின்றோம். 

ஆனால் இந்த வேலைத்திட்டங்கள் இரண்டையும் ஒன்றாக மேற்கொள்ளக்கூடிய பலம் மிக்க அரசியல் உருவாக்கம் ஒன்றை நாட்டுக்குள் ஸ்தாபிக்க எங்களுக்கு முடியாமல் போயிருக்கின்றது. எமது நாட்டில் இருக்கும் சம்பிரதாய அரசியல் சிந்தனைகளே இதற்கு காரணமாகும். 

அதனால்தான் நாட்டின் அரசியல், மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த எடுக்கும் முயற்சிகள் தோல்வியடைந்திருக்கின்றன. இதன் பெறுபேறாகவே இளைஞர்கள் வீதிக்கிறங்கி போராட ஆரம்பித்தார்கள்.

அதனால்தான் சுதந்திர மக்கள் காங்கரஸ் பலம் மிக்க அரசியல், பொருளாதாரத்தை கட்டியெழுப்ப எதிர்க்கட்சிகளை கூட்டிணைத்துக்கொண்டு வேலைத்திட்டம் அமைப்பதற்கு தீர்மானித்தோம். அதன் ஆரம்ப நிகழ்வாகவே இந்த கலந்தரையாடல் இடம்பெறுகின்றது. 

அதனடிப்படையில் அரசியல் மறுசீரமைப்புக்கான மூலோபாய திட்டம் என்ற புத்தகத்தை வெளியிட்டிருக்கின்றோம். இதில் எமது எதிர்கால அரசியல் மறுசீரமைப்புக்கான கொள்கையை தெரிவித்திருக்கின்றோம். 

இந்த புத்தகத்தை கருத்துக்களமாக எடுத்துகொண்டு மக்களின் கருத்துக்களையும் தெரிவிக்க வேண்டும் என இதன் மூலம் நாங்கள் எதிர்பார்க்கின்றோம். எனவே குடும்ப அரசியல், புரட்சிகர அரசியலை தோற்கடித்து, இந்த கலந்துரையாடல்கள் மூலம் புதிய அரசியல் பயணத்தை மேற்கொள்ள அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55