ஆசிய கண்­டத்தில் விதி­மு­றை­க­ளுக்கு முர­ணாக பந்­து­வீ­சு­ப­வர்கள் அதி­க­மி­ருந்து வரு­கின்­றார்­க­ளென தெரி­வித்­துள்ள அவுஸ்­தி­ரே­லிய முன்னாள் கிரிக்கெட் நடுவர் டரல் ஹேயார் அவ்­வாறு பந்து வீசு­வ­தற்கு ஊக்­கு­விக்­கப்­ப­டு­வ­தா­கவும் தெரி­வித்­துள்ளார்.

ஊட­க­மொன்­றுக்கு வழங்­கிய செவ்­வி­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் கூறுகையில் நான் முறை­கே­டான பந்­து­வீச்­சுக்கு எதி­ராக இருந்­துள்ளேன். விளை­யாட்டை காப்­பாற்ற கடு­மை­யாக போரா­டினேன். இந்­திய வீரர் ஹர்­ப­ஜன்சிங், இன்னும் முறை­கே­டாக தான் பந்­து­வீ­சு­கிறார். துஸ்ரா பந்­து­வீச்சில் மட்டும் முறை­கே­டாக வீச­வில்லை. சாதா­ர­ண­மாக வீசும்­போதும் கூட முறை­கே­டாக தான் இருக்­கி­றது. இது­போன்று பந்து வீசு­ப­வர்கள் ஆசிய கண்­டத்தில் அதி­க­மி­ருந்து வரு­கி­றார்கள். அதுபோல் பந்­து­வீச ஊக்­கு­விக்­கப்­ப­டு­கி­றார்கள். அது சரி செய்­யப்­ப­டு­வ­தில்லை.

நடு­வர்­களின் பணி கிரிக்கெட் விதி­களை காப்­பதே. யாரா­வது முறை­கே­டாக பந்­து­வீ­சினால் தக்க நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். நடு­வர்­களின் கண்கள் கட்­டப்­பட்டால் இந்த பிரச்­சினை அப்­ப­டியே தான் இருக்கும். தீர்வு கிடை­யாது என்றார்.

அவுஸ்­தி­ரே­லி­யாவை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் நடுவர் டரல் ஹேயார்­ கி­ரிக்­கெட்டில் பர­ப­ரப்­பு­களை உரு­வாக்­கி­ய­தோடு 1992ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை 78 டெஸ்ட் போட்­டிக்கு நடு­வ­ராக பணி­யாற்­றி­யுள்ளார்.

1995 ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திபதி மெல்­பேர்னில் நடந்த அவுஸ்­தி­ரே­லியா இலங்கை டெஸ்ட் போட்­டியில் இலங்கை சுழற்­பந்து வீச்­சாளர் முத்தையா முரளிதரன் முறைகேடாக பந்து வீசுவதாக 7 பந்துகளுக்கு முறையற்ற பந்தென தீர்ப் பளித்தார். இதனால் சர்ச் சைகள் எழுந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.