பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர்  கலகொட அதே ஞானசார தேரர்  உட்பட 13 பேருக்கு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

எதிர்வரும் ஆண்டு ஜனவரி மாதம் 12 ஆம் திகதி குறித்த 13 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு  கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான ரோஹினி வெலகம மற்றும் குமுதினி விக்ரமசிங்க ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.

2008  தலஹென கிருஸ்தவ தேவாலய மீது  தாக்குதல்  மேற்கொள்ளப்பட்டமை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பில் குறித்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.