பெண்களுக்கு நன்மை பயக்கும் மீன் உணவுகள்

Published By: Robert

29 Nov, 2016 | 09:58 AM
image

அசைவ உணவு வகைகளில் அதிக நன்மை தருவதாகத் திகழ்பவை, மீன்கள். குறிப்பாக, எண்ணெய்ச் சத்துள்ள மீன்களில் உள்ள முழுமைபெறாத ஒமேகா 3 பேட்டி ஆசிட், நம் உடம்பில் கொழுப்புச் சேராமல் பாதுகாக்கிறது.

ஒரு வேளை மீன் சாப்பிடுவது இரண்டு வேளை உணவுக்குச் சமமானது என்று கூறத்தக்க வகையில் அதில் சத்துகள் நிறைந்துள்ளன. முக்கியமாக புரதம், விற்றமின்கள் ஏ, டி மற்றும் பி, இரும்பு, அயடின், செலினியம், துத்தநாகம் உள்ளிட்ட உடலுக்குத் தேவையான அரிதான தனிமச் சத்துகளும் உள்ளன.

பெண்கள் உடல் வளர்ச்சிக்கு மீன் உணவு அவசியம். குறிப்பாக, கர்ப்பமாக இருக்கும்போது, குழந்தையின் மூளை வளர்ச்சிக்குத் தேவையான அரிதான அயடின் சத்து மீன்களில் கிடைக்கிறது. குழந்தைப் பிறப்புக்கு பிறகும் தேவையான பால் சுரக்க மீன்கள் சிறந்த உணவாக உள்ளன.

மீன்கள், மற்ற அசைவ உணவுகளைவிட குறைந்த கலோரியை கொண்ட புரதத்தைப் பெற்றிருப்பது ஆரோக்கியத்துக்கு உகந்தது.

நுண்சத்துகளும் மீன்வகைகளைப் பொறுத்து மாறுபடுகின்றன. ரத்தத்திற்கு தேவையான நுண்சத்து, எலும்புக்கு தேவையான கல்சியம் போன்றவை தாவர உணவுகளைவிட மீன்களில் சிறப்பாக கிடைக்கின்றன.

இதய நோயாளிகள் குறைவான அளவில் ஒழுங்கான இடைவெளியில் மீன் சாப்பிட்டு வந்தால், மாரடைப்பு உயிர் அபாயத்தை கூடியவரை தவிர்க்கலாம். காரணம், மீனில் அதிகமாக உள்ள ஒமேகா 3 பேட்டி ஆசிட், ஈகோசெபென்டனாயிக் அமிலம், டொகொசஹெக்சோனிக் அமிலம் போன்ற சத்துகள் மாரடைப்புக்கான இரத்தக்குழாய் படிவுகளைக் கரைக்க வல்லவை. அதனால், மூன்றில் ஒரு பங்கு மாரடைப்பு வாய்ப்பு குறைகிறது என்று உணவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29
news-image

ஒஸ்பெர்ஜர்'ஸ் சிண்ட்ரோம் எனும் குழந்தைகளுக்கான வளர்ச்சி...

2024-04-04 14:17:36
news-image

அதிரோஸ்கிளிரோசிஸ் எனும் ரத்த நாளத் தடிப்பு...

2024-04-03 16:12:32