சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்து  பிரதமரின் ஆட்சியே நாட்டில் உள்ளது  : வாசுதேவ 

Published By: MD.Lucias

29 Nov, 2016 | 08:44 AM
image

நாட்டில் சட்டத்தின்  ஆட்சி  வீழ்ச்சியடைந்துள்ளது. பிரதமரின் ஆட்சியே இடம்பெறுகின்றது. அத்துடன் மத்திய வங்கி திருட்டு குற்றச்சாட்டு தொடர்பில் அர்ஜுன் மஹேந்திரன் மற்றும் அவரது மருமகனுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்ய ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

சோசலிச மக்கள் முன்னணி கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

மத்திய வங்கி பிணைமுறிதொடர்பான குற்றத்துக்கு அர்ஜுன் மஹேந்திரன் மற்றும் அவரது மருமகனுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவேண்டும். ஜனாதிபதி இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் எதற்காக தாமதிக்கவேண்டும். அத்துடன் பாராளுமன்ற குழு இதுதொடர்பாக ஒரு முடிவுக்கு வந்துள்ளது.  இதுதொடர்பாக இன்னும் தாமதிக்கவேண்டியதில்லை.

அத்துடன் இந்தவிடயங்களை சட்டமா அதிபருக்கு அறிவித்துள்ளதாக பிரதமர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். சட்டமா அதிபருக்கு இதற்கு முன்பும் இது தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எதுவும் நடைபெறுவதில்லை. இந்த மத்திய வங்கி திருட்டு தொடர்பில் பிரதமர் பிரதான சந்தேகநபர். அவரிடம் விசாரணை நடத்தப்படவேண்டும் என கடந்த வருடம் பொலிஸ்மா அதிபருக்கு தெரிவித்திருந்தோம். இதுதொடர்பாக  சட்டமா அதிபரிடம் கருத்து வினவியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். சட்டமா அதிபரிடம் இதுதொடர்பாக  நாம் எழுத்துமூலம் கேட்டிருந்தோம். ஆனால் இதுவரை பதில் இல்லை.

அதேபோன்று பாராளுமன்றத்தில் இதுதொடர்பாக கேள்வி கேட்டபோது அதற்கு பதில் அளிக்கவிடாமல் பிரதமர் இடை மறித்ததுடன் அதுதொடர்பாக சட்டமா அதிபருக்கு அனுப்பிவைத்துள்ளதாக தெரிவித்தார். அத்துடன் விளக்கம் தேவையாயின் கோப் குழுவிடம் கேட்டுக்கொள்ளுமாறு கூறினார்.  மத்திய வங்கி திருட்டுடன் பிரதமருக்கு தொடர்பிருப்பதால் இந்த விடயத்தை அவர் மறைத்துவருகின்றார். அதனால் பிரதமர் பதவியில் ரணில் விக்ரமசிங்க இருக்கும் வரைக்கும் அர்ஜுன் மஹேந்திரனுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. எடுக்கவும் விடமாட்டார்.

அத்துடன் கோப் அறிக்கை தொடர்பாக ஆராய்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழுவினால் நியமிக்கப்பட்ட குழு அதன் அறிக்கையை ஜனாதிபதிக்கு சமர்ப்பித்துள்ளது. ஆனால் அர்ஜுன் மஹேந்திரன் தொடர்பில் பொறுப்பு கூறவேண்டியது பிரதமர். அதனால் அர்ஜுன் மஹேந்திரனுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவிடாமல் பிரதமர் தடுத்துவருகின்றார்.

மேலும் அர்ஜுன் மஹேந்திரனை பிரதமர் ஆரம்பம் முதல் பாதுகாத்துவருகின்றார். ஆரம்பமாக 3பேர் அடங்கிய குழு அமைத்து அவர் குற்றமற்றவர் என பாராளுமன்றத்தில் தெரிவித்தார். தற்போது பொலிஸ்மா அதிபர், சட்டமா அதிபர் திணைக்களங்கள் அவரது கீழ் இருக்கின்றதால் இந்த இடங்களில் அர்ஜுன் மஹேந்திரனுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் இடம்பெறுவதும் இல்லை.  

 இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றார் என்பதை மக்களுக்கு வெளிப்படுத்தவேண்டும். நாட்டின் சட்டாட்சி இன்று நிலைநாட்டப்படுவதில்லை. சட்டாட்சி பிரதமரின் கீழ் இருக்கின்றது. பிரதமர் சட்டாட்சியின் மேல் அமர்ந்திருக்கின்றார். நாட்டில் பிரமதரின் ஆட்சியே இடம்பெறுகின்றது. பொலிஸ் திணைக்களம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம்  பிரதமரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி இதுதொடர்பாக தொடர்ந்தும் மெளனமாக இருப்பது முறையல்ல  என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46