பிஸ்தா பர்ஃபி

Published By: Devika

11 Nov, 2022 | 11:43 AM
image

தேவையான பொருட்கள்: 

பிஸ்தா பருப்பு (உப்பில்லாதது) - 1 டம்ளர் 

சீனி - 2 ½ டம்ளர் 

நெய் - ¼ டம்ளர் 

நீர் - ¾ டம்ளர் 

ஏலக்காய்த்தூள் - ½ தேக்கரண்டி 

செய்முறை: 

ஒரு வாணலியில் நெய்யை விட்டு பிஸ்தா பருப்புகளை ஓரிரு நிமிடங்களுக்கு வதக்கவும். ஆற வைத்துப் பிஸ்தாவை மிக்சியில் போட்டு தண்ணீர் விட்டு அரைக்கவும். சீனியை கொடுக்கப்பட்டுள்ள தண்ணீரின் அளவைப் பயன்படுத்தி பாகு காய்ச்சிக் கொள்ளவும்.

பாகில் அரைத்த பிஸ்தா கலவையைக் கொட்டிக் கிளறவும். அடிக்கடி சிறிது சிறிதாக நெய் சேர்க்கவும். ஒட்டாமல் கெட்டியான பதம் வந்ததும் ஏலக்காய்த் தூளை கலந்து நெய்யை விட்டு கிளறி வேறு நெய் தடவிய தட்டுக்கு மாற்றி ஆற விடவும். சுவையான பிஸ்தா பர்ஃபி தயார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்