தாயும் குழந்தையும் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு ; கணவன் கைது

Published By: Digital Desk 3

11 Nov, 2022 | 12:24 PM
image

யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் உள்ள வீடொன்றின் கிணற்றில் இருந்து தாயும், கைக்குழந்தை ஒன்றும் இன்று வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 

மிருசுவில் தெற்கை சேர்ந்த பிரகாஷ் சந்திரமதி (வயது 40) மற்றும் அவரின் 7 மாத குழந்தையான பிரகாஷ் காருண்யா ஆகியோரே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 

கணவன் மனைவிக்கு இடையில் நேற்று வியாழக்கிழமை இரவு வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாகவும் , அதன் பின்னர்  அதிகாலை 2 மணியளவில் மனைவியையும் பிள்ளையையும் காணவில்லை என கணவன் தேடிய நிலையில் காலை இருவரும் கிணற்றில் சடலமாக காணப்பட்டுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். 

அதேவேளை சவாகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் அ. ஜுட்சன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்து, சடலத்தை மீட்டு உடல்கூற்று பரிசோதனைக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டார். 

பொலிஸாரின் விசாரணைகளின் அடிப்படையில் உயிரிழந்த பெண்ணின் கணவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, கொடிகாம பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13