இறந்தவர்களின் பெயரில் போலியான காணி உறுதி : சட்டத்தரணி மற்றும் முன்னாள் கல்லூரி அதிபர் கைது!

Published By: Nanthini

11 Nov, 2022 | 01:59 PM
image

யாழ்ப்பாணம் அராலி வீதியில் போலி உறுதி மூலம் காணி மோசடி இடம்பெற்றமை தொடர்பான குற்றச்சாட்டில் சட்டத்தரணி ஒருவரும் முன்னாள் பாடசாலை அதிபரும் பொலிஸ் சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவினரால் நேற்று வியாழக்கிழமை (நவ 10) கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

அராலி வீதி – பொம்மைவெளி பகுதியில் உள்ள காணியொன்று அதன் உரிமையாளர்களான இறந்துவிட்ட தம்பதியின் போலிக் கையொப்பங்கள் மூலம் நிறைவேற்றப்பட்ட உறுதியினால் உரிமை மாற்றம் செய்யப்பட்டது. 

அது தொடர்பாக யாழ்ப்பாணம் சிறப்புக் குற்ற விசாரணைப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.

இம்முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை நடத்திய பொலிஸார், கடந்த மாதம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் வழக்கு தொடுத்து, சந்தேக நபர் ஒருவரை கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.

எனினும், பொலிஸாரின் புலன் விசாரணைகள் நிறைவடையாத நிலையில் சந்தேக நபர் கடந்த ஒரு மாதமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதன்போது இந்த மோசடி வழக்கு மீண்டும் நீதிமன்றில் கடந்த வெள்ளிக்கிழமை (நவ 4) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அப்போது தமது புலன் விசாரணை தொடர்பான தொடர் அறிக்கையை பொலிஸ் தரப்பு தாக்கல் செய்தது.

மோசடியில் சம்பந்தப்பட்ட ஏனைய சந்தேக நபர்கள் ஏன் இன்னமும் கைதுசெய்யப்படவில்லை என்றும் நீதிமன்றம் கேள்வியெழுப்பியது.

இதேவேளை சந்தேக நபர் சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா புலன் விசாரணை தொடர்பில் பொலிஸ் தரப்புக்கு எதிராக சரமாரியான குற்றச்சாட்டுக்களை நீதிமன்றில் முன்வைத்தார்.

சந்தேக நபர் சார்பாக முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்கள் பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, கட்டளையொன்றை வழங்கிய மேலதிக நீதிவான், இவ்வழக்கு நடவடிக்கைகளின் பதிவானது யாழ்ப்பாணம் பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும் என்றும், அதன் மீதான அவரின் அறிக்கை வெள்ளிக்கிழமை மன்றில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இந்நிலையில் சட்டத்துக்குப் புறம்பாக உறுதியை நிறைவேற்றி, மோசடிக்கு உடந்தையாக இருந்த சட்டத்தரணி நேற்று வியாழக்கிழமை (நவ 10) கைதுசெய்யப்பட்டார். 

அத்துடன் இந்த வழக்கோடு தொடர்புடைய மற்றொரு சந்தேக நபரான யாழ்ப்பாணம் பிரபல கல்லூரியின் அதிபராக கடமையாற்றி கையூட்டு பெற்ற குற்றச்சாட்டில் சிக்கி பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்ட ஒருவரும் கைதுசெய்யப்பட்டார்.

இவ்விரு சந்தேக நபர்களும் இன்று வெள்ளிக்கிழமை (நவ 11) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்படவுள்ளனர்.

இதேவேளை, இந்த வழக்குடன் தொடர்புடைய வர்த்தகர் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 10:50:13
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28