சவால்களுக்கு மத்தியிலும் இவ்வாண்டின் 3 ஆவது காலாண்டில் யூனியன் வங்கியின் செயற்பாடுகள் முன்னேற்றம்

Published By: Digital Desk 2

11 Nov, 2022 | 09:40 AM
image

சர்வதேச நாணய நிதியத்துடன் ஊழியர் மட்ட உடன்பாடு எட்டப்பட்டிருந்த போதிலும், நடப்பு ஆண்டின் மூன்றாம் காலாண்டு பகுதியில் தொடர்ந்தும் நெருக்கடியான சூழ்நிலை காணப்பட்டதுடன், வங்கியியல் துறையிலும் மந்தமான நிலையை அவதானிக்க முடிந்தது.

எரிபொருள் அடங்கலாக அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதில் உடனடி ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காக பொருளாதாரம் வங்கியியல் துறையில் தொடர்ந்தும் தங்கியிருந்தது.

வலுவிழந்த ரூபாய், அந்நியச் செலாவணி கையிருப்பு குறைவு, வட்டி வீதங்கள் அதிகரிப்பு மற்றும் தற்காலிக தடைகள் காரணமாக இறக்குமதிக் கட்டுப்பாடுகள் போன்றவற்றினால் வங்கிகளின் முன்னேற்றம் மற்றும் கடன் வழங்கல்கள் போன்றன தொடர்ந்தும் பாதிக்கப்பட்டிருந்தன.

இவ்வாறான சூழ்நிலையிலும், வங்கி தொடர்ந்தும் உறுதியான வங்கியியல் நிதிப் பெறுபேறுகளைப் பதிவு செய்திருந்ததுடன், வியாபார வாய்ப்புகளை தெரிவு அடிப்படையில் மேற்கொண்டிருந்ததுடன், இடர்நிலைகளை சீராக கையாண்டிருந்ததுடன், இலாகா மற்றும் வசூலிப்புகளை மேற்கொண்டிருந்தது. சவால்கள் நிறைந்த சூழநிலையிலிருந்து மீள்வதற்கு வியாபாரங்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு ஆதரவளித்திருந்தது.

பிரதான வங்கியியல் செயற்பாடு மற்றும் இலாபகரத்தன்மை 

சவால்கள் நிறைந்த தொழிற்பாட்டு சூழலிலும், வங்கி மீட்சியுடன் திகழ்ந்ததுடன், மூன்றாம் காலாண்டில் வங்கி ரூ. 5,343 மில்லியனை ஒட்டு மொத்த வருமானமாக பதிவு செய்திருந்தது. இது ஒப்பீட்டளவில் 109% அதிகரிப்பாகும். 2022 செப்டெம்பர் 30 ஆம் திகதியுடன் நிறைவடைந்த 9 மாத காலப்பகுதியில், வங்கியின் ஒட்டு மொத்த வருமானம் 55% இனால் அதிகரித்து ரூ. 12,769 மில்லியனாக பதிவாகியிருந்தது.

அதுல் மாலிக் – தவிசாளர், யூனியன் வங்கி

கடன் பிரிவு மற்றும் திறைசேரி சொத்துகளை மீள்-விலையிட்டிருந்ததன் மூலம் பெறப்பட்ட வருமதிகளினூடாக தேறிய வட்டி வருமானம் (NII) 58% இனால் அதிகரித்திருந்தது.  வட்டி செலவீனங்களை முறையாக நிர்வகித்திருந்தமையினூடாக, தேறிய வட்டி எல்லைப் பெறுமதி (NIM) 83 bps இனால் அதிகரித்திருந்தது.

உள்நாட்டு மற்றும் சர்வதேச நிதிப் பரிமாற்றங்கள், ATM கொடுக்கல் வாங்கல்கள், கடன் மற்றும் பற்று அட்டைகள், பண அனுப்புகைகள் மற்றும் வர்த்தக வியாபாரச் செயற்பாடுகளில் அதிகரிப்பு போன்றவற்றினால் தேறிய தரகு மற்றும் கூலி வருமானம் 53% அதிகரிப்பைப் பதிவு செய்திருந்தது. அந்நியச் செலாவணி வருமானத்தினால் ஏனைய தொழிற்பாட்டு வருமானமும் 23% இனால் அதிகரித்திருந்தது.  

மூன்றாம் காலாண்டில், மதிப்பிறக்கங்களுக்கு முன்னரான தொழிற்பாட்டு வருமானம் ரூ. 1977 மில்லியனாக பதிவாகியிருந்தது. இது 45% அதிகரிப்பாகும்.

பாதிக்கப்பட்ட கடன்பெறுநர்களிடமிருந்து கடனை அறவிடுவதில் மேலும் சவால்களை வங்கி எதிர்கொண்டிருந்தமையால், அதிகளவு மதிப்பிறக்கப் பெறுமதியையும், நிர்வாக ஒதுக்கீடுகளையும் பதிவு செய்திருந்தது. மூன்றாம் காலாண்டுக்கான மதிப்பிறக்க கட்டணம் ரூ. 591 மில்லியனாக காணப்பட்டது. இது ஒப்பீட்டளவில் 324% அதிகரிப்பாகும். 

முறையான செலவு முகாமைத்துவ செயற்பாடுகளைக் கொண்டிருந்த போதிலும், வங்கியின் ஒட்டுமொத்த தொழிற்பாட்டு செலவீனம் ரூ. 1,088 மில்லியனாக அதிகரித்திருந்தது. முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது 18% அதிகரிப்பாகும். ரூபாய் மதிப்பிறக்கம் மற்றும் கட்டணப் பட்டியல் விலை உயர்வு போன்றன இதில் தாக்கம் செலுத்தியிருந்தன.

இவற்றின் பிரகாரம், காலாண்டு பகுதியில் தொழிற்பாட்டு செயற்பாடுகளின் பெறுபேறுகள் ரூ. 298 மில்லியனாக பதிவாகியிருந்தது. துணை நிறுவனங்களில் கொண்டுள்ள பங்குகள் அடங்கலாக வங்கியின் வரிக்கு முந்திய இலாபம் ரூ. 93 மில்லியனாக பதிவாகியிருந்ததுடன், வரிக்குப் பிந்திய இலாபம் ரூ. 74 மில்லியனாக பதிவாகியிருந்தது. 2022 செப்டெம்பர் 30 ஆம் திகதியுடன் நிறைவடைந்த 9 மாத காலப்பகுதியில், தொழிற்பாட்டு செயற்பாடுகளினூடாக பெறப்பட்டிருந்த பெறுபேறுகள் ரூ. 852 மில்லியனாக அமைந்திருந்தது. வரிக்கு முந்திய இலாபம் ரூ. 397 மில்லியனாகவும், வரிக்கு பிந்திய இலாபம் ரூ. 227 மில்லியனாகவும் காணப்பட்டது.

இந்திரஜித் விக்ரமசிங்க – பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி, யூனியன் வங்கி

வங்கியின் மொத்த சொத்துகளின் பெறுமதி 2022 செப்டெம்பர் 30 ஆம் திகதியன்று ரூ. 136,715 மில்லியனாக காணப்பட்டது. இது 15% அதிகரிப்பாகும். கடன்கள் மற்றும் முற்பணங்கள் பிரிவு 11% இனால் அதிகரித்து ரூ. 75,148 மில்லியனாக பதிவாகியிருந்தது. வாடிக்கையாளர் வைப்புகள் 13% இனால் அதிகரித்து ரூ. 93,876 மில்லியனாக காணப்பட்டது.  சகல பிரிவுகளிலிருந்தும் CASA மற்றும் தவணை வைப்புகளை பெற்றுக் கொள்வதில் கவனம் செலுத்தியிருந்தமை இவற்றில் பங்களிப்பைச் செலுத்தியிருந்தது. 2022 செப்டெம்பர் 30 ஆம் திகதியன்று CASA விகிதம் 23.7% ஆக காணப்பட்டது. வங்கியின் நிலை 3 கடன் விகிதம் 7.29% ஆக காணப்பட்டது.

ஒழுங்குபடுத்தல் தேவைப்பாடுகளை விட உயர்வாக, வங்கி உறுதியான மூலதன் போதுமை நிலையை பேணியிருந்தது. வங்கியின் மொத்த மூலதன விகிதம் 2022 செப்டெம்பர் 30 ஆம் திகதியன்று 17.02% ஆக பதிவாகியிருந்தது. வங்கியின் தரயப்படுத்தல் BBB-(lka) ஆக 2022 செப்டெம்பர் மாதத்தில் மீள உறுதி செய்யப்பட்டிருந்தது. தொழிற்படும் சூழலில் காணப்படும் அழுத்தங்கள் காரணமாக ஃபிட்ச் தரப்படுத்தலினால் எதிர்மறை தரப்படுத்தல் வழங்கப்பட்டிருந்தது. 

UB ஃபினான்ஸ் கம்பனி லிமிடெட் மற்றும் நஷனல் அசெட் மனேஜ்மன்ட் லிமிடெட் ஆகியவற்றைக் கொண்ட யூனியன் வங்கிக் குழுமம், ரூ. 130 மில்லியன் பெறுமதியான வரிக்கு முந்திய இலாபத்தை காலாண்டிலும், முதல் ஒன்பது மாத காலப்பகுதியில் ரூ. 525 மில்லியனையும் பதிவு செய்திருந்தது. குழுமத்தின் மொத்த சொத்துகள் ரூ. 143,910 மில்லியனாக காணப்பட்டது. இதில் வங்கியின் பங்கு 95% ஐ உயர்வாக அமைந்திருந்தது.

தொழிற்பாட்டு வினைத்திறன்

கூட்டாண்மை வங்கியியல் பிரிவு மாற்றியமைக்கப்பட்ட நிதித் தீர்வுகளை வழங்குவதில் கவனம் செலுத்தியிருந்ததுடன், நெருக்கடியான பொருளாதாரச் சூழலிலும், தெரிவு செய்யப்பட்ட பிரிவுகளில் எழுந்திருந்த புதிய வியாபார வாய்ப்புகளின் அனுகூலத்தைப் பெற்று, ஏற்கனவே காணப்பட்ட வாடிக்கையாளர் உறவுகளை வலிமைப்படுத்தும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்திருந்ததுடன், கடன் பிரிவையும், கடன் தரத்தையும் முறையாக நிர்வகித்திருந்தது. கூட்டாண்மை வங்கிக் கடன்கள் மற்றும் முற்பணங்கள் 32% இனாலும், வைப்புகள் 29% இனாலும் இக்காலாண்டு பகுதியில் அதிகரித்திருந்தன.

சந்தையில் நிலவும் உயர் வட்டி வீதங்களை கவனத்தில் கொண்டு, உரிய நேர வைப்புகள் மற்றும் CASA ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டு புதிய வாடிக்கையாளர் உறவுகள் தொடர்பில் நுகர்வோர் வங்கியியல் பிரிவு தனது செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தது. அதன் பலனாக 8% வைப்புகள் வளர்ச்சியையும், 26% CASA விகிதத்தையும் பதிவு செய்திருந்தது. கடனட்டைதாரர்களுக்கு நிவாரணத்தைப் பெற்றுக் கொடுப்பதில் யூனியன் வங்கி கடனட்டைகள் கவனம் செலுத்தியிருந்ததுடன், மீதி மாற்றங்கள், 0% தவணைக் கொடுப்பனவுகள் மற்றும் கடனட்டை மீதான கடன்கள் மற்றும் e-வணிக கட்டமைப்புகளில் சலுகைகள் போன்றவற்றை சௌகரியத்துக்காக வழங்கியிருந்தது. அத்தியாவசிய நுகர்வுப் பொருட்கள் மற்றும் கட்டணப் பட்டியல் கொடுப்பனவுகள் போன்றவற்றின் மீது விலைக்கழிவுகள் மற்றும் சேமிப்புகள் போன்ற சலுகைகளையும் வழங்கியிருந்ததுடன், கொடுப்பனவுகள் மற்றும் வசூலிப்புகளையும் முறையாக நிர்வகித்திருந்தது. வங்கியின் டிஜிட்டல் கட்டமைப்புகள் தொடர்ச்சியாக சிறந்த சௌகரியத்தை வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக் கொடுக்கும் வகையில் அமைந்திருந்தன.

வங்கியின் கூட்டாண்மைப் பெறுமதிகளை மீண்டும் உறுதி செய்யும் வகையில், LMD மற்றும் Nielsen IQ இணைந்து முன்னெடுத்திருந்த வருடாந்த தரப்படுத்தலின் போது இலங்கையின் நன்மதிப்பை வென்ற நிறுவனங்கள் 2022 இல் யூனியன் வங்கியும் தரப்படுத்தப்பட்டிருந்தது. ஊழியர்கள் மத்தியில் தனது நேர்த்தியான நிலையை வங்கி தொடர்ந்தும் பேணியிருந்தது. ஊழியர் நலன் மற்றும் ஈடுபாடு தொடர்பில் தனது செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்திருந்ததுடன், டிஜிட்டல் வழிநடத்தலில் நடை மற்றும் உடற் தகைமை சவாலுக்கு முகங்கொடுத்து பரிசுகளை வெல்லும் வாய்ப்பு போன்றவற்றுக்கு வங்கியின் கிளை வலையமைப்பைச் சேர்ந்த ஊழியர்களிடமிருந்து பெருமளவு கிடைத்திருந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58