பந்துவீசிய விதம் ஏமாற்றமளிக்கின்றது- ரோகித் சர்மா

Published By: Rajeeban

10 Nov, 2022 | 05:25 PM
image

இங்கிலாந்துடனான அரையிறுதி போட்டி தோல்வியின் பின்னர் இந்திய அணித்தலைவர் ரோகித் சர்மா இந்திய அணி பந்து வீசிய விதம் குறித்து ஏமாற்றம் வெளியிட்டுள்ளார்

இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது

இன்றைய போட்டி முடிவு குறித்து நாங்கள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளோம்,இறுதி ஓவர்களில் நாங்கள் சிறப்பாக விளையாடினோம்- 168 ஓட்டங்களை பெற்றோம் என நான் கருதுகின்றேன்.

ஆனால் நாங்கள் சிறப்பாக பந்து வீசவில்லை,

அணியொன்று 16 ஓவர்களில் போட்டியில் வெற்றிபெறக்கூடிய ஆடுகளம் இல்லை இது.இன்று பந்துவீச்சில் நாங்கள் சிறப்பாக செயற்படவில்லை.

நொக்அவுட் போட்டிகள் என்பது அழுத்தமான சூழ்நிலைகளை சிறப்பாக கையாள்வது தொடர்பானது. 

அழுத்தங்களை கையாள்வது எப்படி என எவருக்கும் கற்றுக்கொடுக்க முடியாது.

ஐபிஎல்லில் நெருக்கடி மிகுந்த பிளேஒவ் போட்டிகளில் இவர்களில் விளையாடும்போது அவர்களால் அந்த அழுத்தங்களை கையாள முடிகின்றது.

நாங்கள் பந்து வீச ஆரம்பித்த விதம் சிறப்பானதாக காணப்படவில்லை நாங்கள் சிறிது பதட்டமாக காணப்பட்டோம்.

இதேவேளை எதிரணியினருக்கும் உரிய பாராட்டை வழங்கவேண்டும்- அவர்கள் சிறப்பாக துடுப்பெடுத்தாடினார்கள்.

புவனேஸ்வர்குமார் முதல் ஓவரை வீசியவேளை பந்து ஸ்விங் ஆகவில்லை - அவர் சரியான இடத்தில் பந்தை பிட்ச் செய்யவில்லை.

நாங்கள் ஓட்டங்களை வழங்காமல் இறுக்கமாக வைத்திருக்க விரும்பினோம்,நாங்கள் இருக்கமாக பந்து வீசியும் துடுப்பாட்ட வீரர்கள் ஓட்டங்களை பெற்றிருந்தால் அது பரவாயில்லை ஆனால் நாங்கள் அதனை செய்யவில்லை.என தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

இலங்கையின் முதலாவது ஆசிய தங்கப் பதக்க...

2024-04-20 09:31:54
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41