இங்கிலாந்துக்கு 169 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

Published By: Vishnu

10 Nov, 2022 | 03:19 PM
image

(நெவில் அன்தனி)

அடிலெய்ட் ஓவல் விளையாட்டரங்கில் இன்று (10) வியாழக்கிழமை நடைபெற்றுவரும் ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண 2ஆவது அரை இறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு 169 ஓட்டங்களை வெற்றி இலக்காக இந்தியா நிர்ணயித்துள்ளது.

England wait - without success - for a DRS review against Virat Kohli, England vs India, Men's T20 World Cup 2022, 2nd semi-final, Adelaide, November 10, 2022

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 168ஓட்டங்களைக் குவித்தது.

Hardik Pandya took time to get in in the semi-final, England vs India, Men's T20 World Cup 2022, 2nd semi-final, Adelaide, November 10, 2022

விராத் கோஹ்லியும் ஹார்த்திக் பாண்டியாவும் அரைச் சதங்கள் குவித்ததுடன் இருவரும் 4ஆவது விக்கெட்டில் 61 ஓட்டங்களைப் பகிர்ந்து  இந்திய அணியைப் பலப்படுத்தினர்.

இந்த உலகக் கிண்ணப் போட்டியில் தனது 4ஆவது அரைச் சதத்தைக் குவித்த விராத் கோஹ்லி சரியாக 50 ஓட்டங்களுடன் ஆட்டமிழழந்தார்.

இதனிடையே கோஹ்லி 42ஆவது ஓட்டத்தைப் பெற்றபோது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் 4,000 ஓட்டங்களைப் பூர்த்தி செய்த முதலாவது வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை நிலைநாட்டினார்.

மறுபக்கத்தில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய ஹார்திக் பாண்டியா 33 பந்துகளில் 5 சிக்ஸ்கள், 4 பவுண்டறிகள் உட்பட 63 ஓட்டங்களைப் பெற்று கடைசிப் பந்தில் ஹிட்-விக்கெட் முறையில் ஆட்டமிழந்தார்.

அவர்களை விட ரோஹித் ஷர்மா 27 ஓட்டங்களையும் சூரியகுமார் யாதவ் 14 ஓட்டங்களையும் ரிஷாப் பன்ட் 6 ஓட்டங்களையும் கே. எல். ராகுல் 5 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் கிறிஸ் ஜோர்டன் 43 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58