(ப.பன்னீர்செல்வம்) 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த மாதம் மலேஷியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்கிறார். இரண்டு தினங்கள் ஜனாதிபதியும் குழுவினரும் மலேசியாவில் தங்கியிருப்பார்கள் என்றும் தெரியவருகிறது. 

இதன்போது மலேசியத் தலைவர்கள் பலரை சந்தித்து ஜனாதிபதி உரையாடவுள்ளார். இரு தரப்பு நட்புறவு மற்றும் பொருளாதார விடயங்கள் தொடர்பிலும் இரு நாட்டுத் தலைவர்களிடையே பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளன.