(லியோ நிரோஷ தர்ஷன்)

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து அமெரிக்காவின் பசுபிக் கட்டளை பீடத்தின் தளபதியுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடியுள்ளார். 

இதன் போது கடல் மார்க்கமான பாதுபாப்பு ஒத்துழைப்புகள் மற்றும் கூட்டு பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது.

கொழும்பில்  நடைப்பெறுகின்ற கடல்சார் பாதுகாப்பு மாநாடான, காலி கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக அமெரிக்காவின் பசுபிக் கட்டளை பீடத்தின் தளபதி, அட்மிரல் ஹரி ஹரிஸ் இலங்கைக்கு விஜயம் மெற்கொண்டுள்ளார். 

அவருடன், பாதுகாப்புக் கற்கைகளுக்கான ஆசிய பசுபிக் மையத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஹார்ட்செல்லும் வருகை தந்துள்ளார். 

இலங்கைக்கு முதல் முறையாக விஜயம் மேற்கொண்டுள்ள பசுபிக் கட்டளை பீடத்தின் தளபதி, அட்மிரல் ஹரி ஹரிஸ் மற்றும் மேஜர் ஜெனரல் ஹார்ட்செல் ஆகியோரை இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப், விமான நிலையத்தில் வரவேற்றார்.

அதன் பின்னர், அலரி மாளிகையில், அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப்பீடத்தின் தளபதி அட்மிரல் ஹரி ஹரிஸ், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இந்தச் சந்திப்பின் போது ஆராயப்பட்டுள்ளது.