சில கோரிக்கைகளை முன்வைத்து டிசம்பர் முதலாம் திகதி 24 மணித்தியால அடையாள வேலை நிறுத்தத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக, ரயில்வே தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இதன்படி ரயில் எஞ்சின் ஓட்டுநர்கள், புகையிரத நிலைய ஊழியர்கள் மற்றும் ரயில் கடவை ஊழியர்கள் குறித்த அடையாள வேலை நிறுத்தத்தில்  ஈடுபடவுள்ளனர்.