உட்கட்டமைப்பு அபிவிருத்தி ஊடாக அரச நிதி மோசடி - தயாசிறி ஜயசேகர குற்றச்சாட்டு

Published By: Digital Desk 2

10 Nov, 2022 | 10:47 AM
image

(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்)

பொருளாதார பாதிப்பினால் பெரும்பாலானோர் பட்டினியால் வாடும் நிலையில் அரசாங்கம் பாதுகாப்பு அமைச்சுக்கு அதிக நிதியை ஒதுக்கீடு செய்துள்ளமை எந்த விதத்தில் நியாயமானதாகும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் உட்கட்டமைப்பு அபிவிருத்தி ஊடாக அரச நிதி மோசடி செய்யும் சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளமை கவலைக்குரியது என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற பெறுமதி சேரி வரிச்சட்டம் கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Dayasiri Jayasekara tests COVID-19 positive

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வரி அதிகரிப்பிற்கு மாத்திரம் எவ்வித குறையும் இல்லை. குறுகிய காலத்தில் அரச வருமானத்தை அதிகரித்துக் கொள்ள அரசாங்கம் எவ்வித மட்டுப்பாடும் இல்லாத வகையில் வரிகளை அதிகரித்துள்ளன.

சமூக பாதுகாப்பு அறவீட்டுத்தொகை வரி 2.5 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. சமூக பாதுகாப்பு அறவீட்டுத்தொகை அனைத்து சேவை துறைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்த வரியை ஆறு மாத காலத்திற்கு பின்னர் நீக்கிக்கொள்வதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது,ஆனால் அது நடைமுறைக்கு சாத்தியமற்றதாகும்.

அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளை சுட்டிக்காட்டுபவர்களுக்கு எதிராக அரசாங்கம் கடுமையான அடக்குமுறையை பிரயோகிக்கிறது.

ஜனநாயக ரீதியான போராட்டத்தில் தாக்குதலை முன்னெடுத்தவர்கள் தற்போது மக்கள் போராட்டத்திற்கு எதிராக செயற்படுகிறார்கள்.

அரசாங்கத்தின் அடக்குமுறையால் வீதிக்கு இறங்கி போராட்டத்தில் ஈடுப்பட ஒரு தரப்பினர் அச்சம் கொண்டிருந்த வேளை தான் கடந்த வாரம் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துக் கொண்டோம்.

அனைத்து தரப்பினரது அரசியல் நிலைப்பாடுகளும் மாறுப்பட்டதாகும். மக்கள் போராட்டத்தை முடக்கும் வகையில் வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவதை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து மொத்த சனத்தொகையில் பெரும்பாலானோர் பட்டினியால் வாடும் போது அரசாங்கம் பாதுகாப்பு அமைச்சுக்கு அதிக நிதி ஒதுக்கப்படுகிறது.

2023ஆம் ஆண்டுக்கான குறைநிரப்பு பிரேரணையில் 360 பில்லியன் நிதி பாதுகாப்பு அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மறுபுறம் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக 323 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நாட்டு மக்கள் நலன்புரி தேவைகளை வேண்டிய நிற்கும் நிலையில் அரசாங்கம் உட்கட்டமைப்பு ஊடாக முன்னரை போல் அரச நிதியை மோசடி செய்ய முயற்சிக்கிறது. ஊழல் மோசடியை நிறுத்திக் கொண்டால் நடுத்தர மக்களின் பொருளாதாரத்தை பலப்படுத்த முடியும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08