19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான இலங்கை அணிக்கு விஷ்மி தலைவியாக நியமனம்

Published By: Digital Desk 2

10 Nov, 2022 | 09:54 AM
image

(என்.வீ.ஏ.)

இந்தியாவில் நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான நான்கு முனை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள இலங்கை யுவதிகள் அணிக்கு தேசிய வீராங்கனை விஷ்மி குணரட்ன தலைவியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

19 வயதுக்குட்பட்ட இந்திய ஏ அணி, இந்திய பி அணி, மேற்கிந்தியத் தீவுகள் அணி ஆகியவற்றுடன் இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட பெண்கள் அணி மோதும்.

19 வயதுக்குட்பட்ட இந்திய பி அணிக்கு எதிராக நவம்பர் 13ஆம் திகதியும் 19 வயதுக்குட்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக நவம்பர் 15ஆம் திகதியும் 19 வயதுக்குட்பட்ட இந்திய ஏ அணிக்கு எதிராக நவம்பர் 17ஆம் திகதியும் 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி விளையாடும்.

இப் போட்டிகள் யாவும் விசாகபட்டினத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொடருக்கான 19 வயதுக்குட்பட்ட அணியில் 15 வீராங்கனைகள் பெயரிடப்பட்டுள்ளனர்.

அண்மையில் நடத்தப்பட்ட பெண்கள் யூத் லீக் கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றிய கிளிநொச்சி, யாழ்ப்பாணம் வீராங்கனைகளுக்கு இலங்கை அணியில் இடம்கிடைக்கவில்லை.

அணி விபரம்

விஷ்மி குணரட்ன (தலைவி), தெவ்மி விஹங்கா (உதவித் தலைவி), உமாயா ரத்நாயக்க, விதூஷிக்கா பெரேரா, (நால்வரும் ரத்னாவலி பெண்கள் பாடசாலை, கம்பஹா), சஞ்சனா காவிந்தி, ரஷ்மி நேத்ராஞ்சலி, சுமுது நிசன்சலா, விஹாரா செவ்வந்தி (நால்வரும் தேவபத்திராஜா தேசிய பாடசாலை, ரத்கம), ரஷ்மிக்கா செவ்வந்தி, பமோதா ஷைனி, ரிஷ்மி சஞ்சனா (மூவரும் அநுரா கல்லூரி, மாத்தறை), மானுதி நாணயக்கார, ஹிருணி பெரேரா (இருவரும் பிறின்செஸ் ஒவ் வேல்ஸ், மொறட்டுவை), துலங்கா திசாநாயக்க (அனுலா கல்லூரி, நுகேகொடை), நெத்மி சேனாரத்ன (வாத்துவை மத்திய கல்லூரி),

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41