அமெரிக்கத் தேர்தல்கள்: இரு பிரதான கட்சிகளும் கடும்போட்டி

Published By: Sethu

09 Nov, 2022 | 06:38 PM
image

அமெரிக்காவின் இடைக்காலத் தேர்தல்களின் பெறுபேறுகளில் ஜனாதிபதி ஜோ பைடனின் ஜனநாயகக் கட்சிக்கும், முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் குடியரசுக் கட்சிக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது.

அமெரிக்க நாடாளுமன்ற கீழ்சபையின் அனைத்து 435 உறுப்பினர்களும், 100 செனட் உறுப்பினர்களில் 35 பேரும் 39 மாநிலங்கள், பிராந்தியங்களின் ஆளுநர்கள் மற்றும் பல உயர் பதவிக்குரியவர்களும் நேற்று நடைபெற்ற தேர்தல்கள் மூலம் தெரிவுசெய்யப்படவுள்ளனர். 

இத்தேர்தலின் உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு பல நாட்கள் செல்லும் நிலையில், ஒவ்வொரு தொகுதியிலும் எந்த கட்சி வெற்றியீட்டும் என்பதை கணிப்புகள் மூலம் முன்கூட்டியே பிரதான ஊடகங்கள் வெளிப்படுத்துவது வழக்கம்.

இதன்படி, இதுவரையான வெளியான பெறுபேற்று கணிப்புகளின்படி இரு கட்சிகளும் ஏறத்தாழ சம அளவிலான ஆசனங்களை வென்றுள்ளன. குறிப்பாக செனட் சபையைக் கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவுகிறது.

100 ஆசனங்களைக் கொண்ட செனட் சபைக்கான தேர்தலில் குடியரசுக் கட்சி 47 ஆசனங்களையும் ஜனநாயகக் கட்சி 46 ஆசனங்களையும் வென்றுள்ளதாக அசோஷியேட்டட் பிரஸ் தெரிவிக்கிறது. 

ஆனால், இரு கட்சிகளும் தலா 48 ஆசனங்களை வென்றுள்ளதாக சிஎன்என் தெரிவிக்கிறது.

கீழ் சபையான பிரதிநிதிகள் சபைக்கு 435 ஆசனங்களுக்கும் தேர்தல்கள் நடைபெற்றன. இதில் இதுவரையான பெறுபேறுகளின்படி 199 ஆசனங்களை குடியரசுக்கட்சியும் 178 ஆசனங்களை குடியரசுக் கட்சி வென்றுள்ளதாக சிஎன்என் கணித்துள்ளது. 

199 ஆசனங்களை குடியரசுக்கட்சியும் 172 ஆசனங்களை குடியரசுக் கட்சி வென்றுள்ளதாக அசோஷியேடட் பிரஸ் கணித்துள்ளது.

இத்தேர்தலில் குடியரசுக் கட்சிக்கு ஆதரவான அலை வீசும் எனக் கருதப்பட்டிருந்தது. ஆனால், எதிர்பார்க்கப்பட்டதைவிட ஜனநாயகக் கட்சி கணிசமான ஆசனங்களை வென்றுள்ளது.

எனினும் பிரதிநிதிகள் சபையை குடியரசுக் கட்சி கைப்பற்றினால் அச்சபையை குடியரசுக் கட்சி கைப்பற்றுவ 2018 ஆம் ஆண்டின் பின்னர் இதுவே முதல் தடவையாக அமையும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47