ரிட்ஸ்பறி Tennis 10's : யாழ். இந்து ஆரம்பப் பாடசாலை சம்பியன் ; சென் பெற்றிக்ஸ் 2 ஆம் இடம்

Published By: Digital Desk 5

09 Nov, 2022 | 07:13 PM
image

(நெவில் அன்தனி)

இலங்கை டென்னிஸ் சம்மேளனத்தினால் அண்மையில் நடத்தப்பட்ட ரிட்ஸ்பறி அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான டென்னிஸ் டென்ஸ் (Tennis 10's) சுற்றுப் போட்டியில்  சிறுமிகளுக்கான   சிவப்பு பந்து பிரிவில் யாழ். இந்து ஆரம்பப் பாடசாலை அணி சம்பியனானது.

அப் பிரிவில் களுத்துறை மகளிர் மகா வித்தியாலயம் இரண்டாம் இடத்தையும் கொழும்பு விசாக்கா வித்தியாலயம் 3ஆம் இடத்தையும் பெற்றன.

சிவப்பு பந்து சிறுவர்கள் பிரிவில் யாழ். புனித பத்திரிசியார் கல்லுரி இரண்டாம் இடத்தைப் பெற்றது.

அப் பிரிவில் கொழும்பு ஆனந்த கல்லூரி சம்பியனானதுடன் காலி றிச்மண்ட் கல்லூரி 3ஆம் இடத்தைப் பெற்றது.

சிறுவர்களுக்கான பச்சை, சிவப்பு, செம்மஞ்சள் ஆகிய பந்துகளைக் கொண்ட 3 பிரிவுகளிலும் ஆனந்த கல்லூரி சம்பியனானது.

டென்னிஸ் டென்ஸ் என்பது ஒவவொரு அணியிலும் 10 வீரர்கள், 10 வீராங்கனைகள் பங்குபற்றும் போட்டியாகும்.

சிறுவர்களுக்கான பச்சை பந்து பிரிவில் குருநாகல் மலியதேவ கல்லூரி 2ஆம் இடத்தையும் கல்கிஸ்ஸை சென் தோமஸ் 3ஆம் இடத்தையும் சிறுமிகளுக்கான பச்சை பந்து பிரிவில் கொழும்பு விசாக்கா வித்தியாலயம் சம்பியன் பட்டத்தையும் கொழும்பு மியூஸியஸ் கல்லூரி 2ஆம் இடத்தையும் களுத்துறை மகளிர் மகா வித்தியாலயம் 3ஆம் இடத்தையும் பெற்றன.

சிறுவர்களுக்கான செம்மஞ்சள் பந்து பிரிவில் கொழும்பு ஆனந்த கல்லூரி சம்பியனானது. பம்பலப்பிட்டி புனித பேதுருவானர் கல்லூரி 2ஆம் இடத்தையும் கொழும்பு நாலந்த கல்லூரி 3ஆம் இடத்தையும் பெற்றன.

சிறுமிகளுக்கான செம்மஞ்சள் பந்து பிரிவில் கொழும்பு மகளிர் கல்லூரி சம்பியனானதுடன் விசாக்கா வித்தியாலயம் 2ஆம் இடத்தையும் பாணந்துறை சென் ஜோன்ஸ் பெண்கள் கல்லூரி 3ஆம் இடத்தையும் பெற்றன.

கொவிட் - 19 தொற்றுநோய் தாக்கம் காரணமாக தடைப்பட்டிருந்த இந்த சுற்றுப் போட்டி 2 வருடங்களின் பின்னர் நடத்தப்பட்டது.

நாடு முழுவதிலுமிருந்து 121 பாடசாலை அணிகளைச் சேர்ந்த 1210 மாணவ, மாணவிகள் பங்குபற்றினர்.

இப் போட்டிக்கு றிட்ஸ்பறி பிரதான அனுசரணை வழங்கியதுடன் சன்குவிக், ஈவா, பெரேரா அண்ட் சன்ஸ் ஆகிய நிறுவனங்கள் போட்டி அனுசரணையாளராகவும் 3ஜீ ஸ்பொர்ட்ஸ் நிறுவனம் பந்துக்கான உத்தியோகபூர்வ அனுசரணையாளராகவும் இணைந்திருந்தன.

படங்கள்:

1 யாழ். இந்து ஆரம்பப் பாடசாலை அணியினர்

1ஏ யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி அணியினர்

1பி ஆனந்த கல்லூரி அணியினர்

2 மலியதேவ கல்லூரி அணியினர்

3 கல்கிஸ்ஸை சென் தோமஸ் அணியினர்

4 விகாக்கா வித்தியாலய அணியினர்

5 மியூசியஸ் கல்லூரி அணியினர்

6 களுத்துறை மகளிர் அணியினர்

7 ஆனந்த கல்லூரி அணியினர்

9 ரிச்மண்ட் கல்லூரி அணியினர்

11 களுத்துறை மகளிர் அணியினர்

12 விசாக்கா வித்தியாலய அணியினர்

13 ஆனந்த கல்லூரி அணியினர்

14 பம்பலப்பிட்டி புனித பேதுருவானர்அணியினர்

15 நாலந்த கல்லூரி அணியினர்

16 மகளிர் கல்லூரி அணியினர்

17 விசாக்கா வித்தியாலய அணியினர்

18 பாணந்துறை சென் ஜோன்ஸ் பெண்கள் அணியினர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35