சபாநாயகருக்கான ஜனாதிபதியின் கடிதம் அச்சுறுத்தல் அல்ல - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

Published By: Digital Desk 5

09 Nov, 2022 | 10:00 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

பாராளுமன்ற நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளுமாறு சபாநாயகருக்கு ஜனாதிபதி எழுதியிருந்த கடிதம் அச்சுறுத்தலான கோரிக்கை அல்ல. மாறாக வேண்டுகோளாகும் என ஆளுங்கட்சி பிரதமகொறட அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி பிரதமகொறட லக்ஷ்மன் கிரியெல்ல ஒகுங்கு பிரச்சினை ஒன்றை எழுப்பி, பாராளுமன்றத்தின் நடவடிக்கைகளுக்கு சபாநாயகரே பொறுப்பாகும். அதனால்தான் ஜனாதிபதி கடிதம் ஒன்றின் ஊடாக பாராளுமன்ற நடவடிக்கைகள் மந்தகதியில் செல்கின்றன. பாராளுமன்றத்தில் எடுக்கப்படும் தீர்மானங்களை விரைவாக மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டிருந்தார்.

அத்துடன் பாராளுமன்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்த ஆளும் தரப்பினர் விரைவாக செயற்படுவதில்லை என சபாநாயகர் பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்திருக்கின்றார்.

அவரின் கருத்து சரியானது. ஏனெனில் சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் செய்துகொண்டுள்ள உடன்படிக்கையை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்குமாறு நாங்கள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றோம். அதனை அரசாங்கம் இன்னும் செய்யவில்லை.

அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்ட அறிக்கை சபைக்கு சமர்ப்பித்தால், இந்த உடன்படிக்கை இல்லாமல், எப்படி விவாதிப்பது? என்றார்.

இதனைத்தொடர்ந்து எழுந்த எதிர்க்கட்சி உறுப்பினர் புத்திக்க பத்திரண தெரிவிக்கையில், சபாநாயகருக்கு ஜனாதிபதி எழுதியிருந்த கடிதம் எச்சரிக்கை விடுக்கும் வகையிலேயே எமக்கு விளங்குகின்றது. ஏனெனில் நிறைவேற்று ஜனாதிபதியாக இருந்த யாரும் எனக்கு தெரிந்தமட்டில் இவ்வாறானதொரு கடிதம் சபாநாயகருக்கு எழுதியதில்லை என்றே நான் நினைக்கின்றேன் என்றார்.

இந்த விடயங்களுக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சபாநாயகருக்கு அனுப்பி இருந்த கடிதம், அச்சுறுத்தலானது அல்ல. மாறாக பாராளுமன்றத்துக்கு பொறுப்புக்கூறவேண்டியர் என்றவகையில், கட்சித்தலைவர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட சில தீர்மானங்களை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோளாகவே அனுப்பப்பட்டிருந்தது.

கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது  சில தீர்மானங்களை எடுத்திருந்தோம். குறிப்பாக துறைசார் மேற்பார்வை குழுவை அமைத்தல், இளைஞர்கள் 5பேரை அதில் உள்ளடக்குதல், தேசிய சபை அமைத்தல் இவ்வாறான விடயங்களை விரைவாக மேற்கொள்ளுமாறே கடிதம் மூலம் கேட்டுக்கொண்டிருந்தார். அந்த கடிதத்தையும் சபைக்கு சமர்ப்பிக்கின்றேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55