இலங்கை கிரிக்கெட் சபை ஊழல் மோசடிகளின் குகையாக மாறியுள்ளது - நளின் பண்டார

Published By: Digital Desk 5

09 Nov, 2022 | 10:05 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)

இலங்கை கிரிக்கெட் சபை ஊழல் மோசடிகளின் குகையாக மாறியுள்ளதுடன், அந்த சபை சூதாட்டக்காரர்களுக்கு அடிமையான ஒன்றாக இருக்கின்றது என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (09) சிறப்புரிமை பிரச்சினை ஒன்றை  முன்வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

ஆசிய கிண்ணத்தை இலங்கையில் நடத்த இருந்த சந்தர்ப்பம் இல்லாமல் போனமை தொடர்பில் நான் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்த கருத்துக்கு, இலங்கை கிரிக்கெட் நிறுவாக சபை தலைவர் செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தி என்னை அவமானப்படுபத்தும் வகையில் கருத்து தெரிவித்திருந்ததுடன் 2பில்லியன் மான நஷ்டஈடு கோரி கடிதம் அனுப்பவும் கரிக்கட் சபை நடவடிக்கை எடுத்திருந்தது. இது எனது சிறப்புரிமை மீறும் செயலாகும்.

அத்துடன் இலங்கை கிரிக்கெட் நிர்வாக சபை ஊழல் மோசடிகளின் குகையாக மாறியுள்ளது. இவர்கள் உலகக் கிண்ணத்தை விடவும் எல்.பி.எல் போட்டிகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர். வேறு நாடுகளில் கிரிக்கெட் போட்டிகளை அந்நாடுகளின் கிரிக்கெட் நிர்வாக சபையே நடத்துகின்றது. 

ஆனால் இங்கே ரி20 மற்றும் ரி 10 போட்டிகளை நடத்துபவர்கள் வேறு யாரோ. இன்று சூதாட்டக்காரர்களுக்கு அடிமையான கிரிக்கெட் நிர்வாக சபையே உள்ளது. அதன் பெறுபேறுகளையே நாங்கள் அனுபவிக்கின்றோம்.

காலியில் நடந்த பாகிஸ்தான் - இலங்கை போட்டியில் 400 ஓட்டங்களை எடுத்தும் இலங்கை அணி தோல்வியடைந்தது. இதற்கு ஆட்ட நிர்ணய சதியே காரணமாகும். மைதான ஒழுங்குபடுத்துவர்கள் முதல் அனைவருக்கும் பணம் கொடுத்து கிரிக்கெட் நிர்வாக சபை சூதாட்ட நிலையமாக மாறியுள்ளது. இதன் தலைவர் தான்தோன்றித்தனமாக செயற்படுகின்றார்.

இதனால் பாராளுமன்றத்திற்கும் அப்பாலான அதிகாரத்தை கொண்ட கிரிக்கெட் சபையின் தலைவரை கோப் குழுவுக்கு அழைக்க எதிர்பார்க்கின்றோம். அவர் எப்போதும் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சரை தன் பக்கம் வைத்துக்கொண்டு செயற்பட்டு வந்துள்ளார். 

ஆனால் தற்போதுள்ள அமைச்சரை அவ்வாறு செய்ய முடியாமல் போயிருக்கின்றது. அதனால் விளையாட்டுத்து அமைச்சருக்கும் சமூகவலைத்தலங்களுக்கு பணம் கொடுத்து விமர்சிக்க நடவடிக்கை எடுத்திருக்கின்றார்

இதேவேளை ரி,20 உலகக்கிண்ண போட்டியில் கிரிக்கெட் அணியில் காயமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தன உலகக்கிண்ணத்தை நாங்கள் பெற்றுக்கொள்ளும்போது ரி 20 உலகக்கிண்ணத்தை கைப்பெறுக்கொள்ளும்போதும் இந்தளவு எண்ணிக்கையிலான வீரர்கள் காயமடையவில்லை. அதனால்  இது தொடர்பாக அமைச்சர் ஆராய வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58