போதை பொருள் பயன்பாடு, கலாச்சார சீரழிவுகளுக்கு எதிராக பெண்கள் போராட வேண்டும் - அகில இலங்கை இந்து மாமன்ற உப தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன்

Published By: Digital Desk 5

09 Nov, 2022 | 12:58 PM
image

( எம்.நியூட்டன்)

போதை பொருள் பயன்பாடு,  கலாச்சார சீரழிவுகளுக்கு எதிராக  பெண்கள்  போராடினால் இந்த  பிரச்சினைகளை தீர்க்க முடியும் என அகில இலங்கை இந்து மாமன்ற உப தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன் தெரிவித்தார்.

வலிகாமம் தென் மேற்கு பிரதேச சபையின் முழுநிலா கலைவிழா நிகழ்வு திங்கட்கிழமை (07) மாலை பிரதேசசபை கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

 இன்றைய சமுதாயத்தில் செயல்பாடுகள் வேதனைக்குரிய விடயமாக மாறி உள்ளது. இன்றைய நாகரீகமாக வீதிகளில் சும்மா நிற்பதே  வேலையாக உள்ளது. இத்தகைய ஒரு சமுதாயத்திற்காக கடந்த காலங்களில் போராட்டங்கள் இடம்பெற்றது. எத்தனை இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை எதிர்கால சமுதாயத்திற்காக இறந்திருக்கின்றார்கள். ஆனால் இன்று வேதனை தரும் விடயமாக மாறி உள்ளது.இன்றைய சமுதாயத்திற்கு  துன்பங்களை சொல்லி வழக்காத நிலை உருவாகியுள்ளது. 

தண்ணிர் போத்தலை காசுக்கு வாங்கி குடிப்பதை கெளரவம் என்று நினைக்கத் தொடங்கியுள்ளோம். கிணற்றில் தண்ணீர் அள்ளி குடித்து தையிரியத்துடன் வாழ்ந்த சமுதாயம் இன்று எல்லாத்திற்கும் காசு கொடுக்கிறோம். இவற்றில்  மாற்றம் வேண்டும். 

எத்தனையோ தேசங்களில் பலர் கடின உழைப்பு ஊழைக்கிறார்கள். மேலைநாடுகளில் பல்கலை மாணவர்கள் பகுதி நேரமாக வேலை செய்கிறார்கள். இங்கும் குறிப்பாக யாழ் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கு வந்துள்ள தென்னிலங்கை மாணவர்கள் பகுதிநேரமாக விடுதிகளில்  வேலை செய்கிறார்கள். 

வீட்டில் கஸ்டம் என்பதால் நாங்கள் வேலை செய்து உழைக்கிறோம் என்கிறார்கள். எமது பகுதியில் பல்கலைக்கழகம் கிடைத்தவுடன் பல லட்சம் பெறுமதியில் மோட்டார்சைக்கிள்  கொடுத்துள்ளார்கள்.அவர் சும்மா சுற்றி திரிகிறார்கள்.இவ்வாறு செய்து கொடுத்துவிட்டு போதை ,கலாச்சார சிரழிவு என  மற்றவர்களை குறை கூறுபவர்களாக மாறிவிட்டோம். 

இதற்கு முழு குற்றவாளிகளும் நாங்கள் தான் எங்களுடைய பிள்ளைகள் தான் அறுவடை செய்கின்றோம். வெளியிலிருந்து வந்து எங்களுக்கு தீமை செய்யலாம் ஆனால்  நாங்கள் திடமாக இருந்தால் எங்களை யாரும் மாற்றிவிட முடியாது.போதைவஸ்தை வெளியில் இருந்து விதைக்கிறார்கள் என்பதற்கு அப்பால் ஏன் இதற்குள் செல்கிறிர்கள் என்பதே கேள்வி? 

போதைவஸ்தை ஏழைகள் செய்வதாக நினைக்கவேண்டாம் பணக்காரர்தான் அதனை வியாபாரமாக்கிறார்கள். இன்று போதைவஸ்தை பற்றி கதைக்கிறோம் 2009 ஆண்டிற்கு பின்னர் வடக்கில் எத்தனை மதுசாலைகள் திறக்கப்பட்டுள்ளன.

இதனை கண்டித்து ஏன்  பெண்கள் ஏன் இதனை தடுக்க முன்வரவில்லை? போராட்டம் செய்ய முன்வரவில்லை?  பெண்கள் எல்லாம் படித்தவர்கள்  பல இடங்களிலும் தலைமை பொறுப்பில் உள்ளார்கள் கார்கள் வாகனங்கள் ஒடுகிறார்கள்.

பெண்கள் போதை ,சீரழிவு போன்ற பிரச்சினைகளை கையில் எடுத்தால் இந்த நாட்டில் பல பிரச்சினைகள் தீரும் சமுதாயம் பழுதாவதற்கு இளம் பிள்ளைகளை பிழை கூறமுடியாது. பெற்றோரிடம் இருக்க வேண்டிய ஒழுக்கம் ,பண்பாடு ஆசிரியர்களிடம் இருக்கவேண்டிய ஒழுக்கம் பண்பாடு இவை சரியாக அமைகின்ற போதுதான் சமுதாயத்தை வழிநடத்த முடியும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காத்தான்குடிபாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின் சடலம்...

2024-04-18 15:48:16
news-image

பிட்டிகல பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2024-04-18 15:42:00
news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39
news-image

இலங்கையில் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு காரணம்...

2024-04-18 15:43:57
news-image

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் இடமாற்றத்தை...

2024-04-18 15:29:41
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52