உலகக் கிண்ண வாய்ப்பு கத்தாருக்கு வழங்கப்பட்டமை தவறு: பீபா முன்னாள் தலைவர் பிளாட்டர்

Published By: Sethu

09 Nov, 2022 | 11:14 AM
image

2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியை நடத்தும் உரிமை கத்தாருக்கு வழங்கப்பட்டமை ஒரு தவறு என சர்வதேச கால்பந்தாட்டச் சங்கங்களின் சம்மேளனத்தின் (FIFA - பீபா) முன்னாள் தலைவர் செப் பிளாட்டர் கூறியுள்ளார்.

2018 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளின் உலக கிண்ணக் கால்பந்தாட்டப் போட்டிகளை நடத்தும் நாடுகளை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு 2010 ஆம் ஆண்டு ஏககாலத்தில் நடைபெற்றது. 2018 ஆம் ஆண்டு போட்டிகளை நடத்தும் உரிமையை ரஷ்யா பெற்றது.

2022 ஆம் ஆண்டின் போட்டிகளை நடத்தும் உரிமையைப் பெறுவதற்கு இறுதியாக கத்தாரும் ஐக்கிய அமெரிக்காவும் போட்டியிட்டன. இப்போட்டியில் கத்தார் 14 வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியது. அமெரிக்காவுக்கு 8 வாக்குகளே கிடைத்தன. அப்போது பீபாவின் தலைவராக ஸெப் பிளாட்டரே பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இப்போட்டிகளை நடத்தும் உரிமை கத்தாருக்கு வழங்கப்பட்டமை தவறானது என ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியில் 86 வயதான செப் பிளாட்டர் கூறியுள்ளார்.

'அது ஒரு தவறு. நான் தலைவராக இருந்தபோது மேற்கொள்ளப்பட்ட தீர்மானித்தின்படி அது நடந்தது. எனவே அதற்கான பகுதியளவு பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன்' என பிளாட்டர் கூறினார்.

அவ்வாக்கெடுப்பில் அமெரிக்காவுக்கு தான் வாக்களித்தாகவும், ஆனால் ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்கங்களின் ஒன்றியத்தின் (UEFA) அப்போதைய தலைவரான மைக்கல் பிளாட்டினி அவருடையதும் அவரின் (UEFA) அணியினரதும் 4 வாக்குகளை கத்தாருக்கு அளிக்கச் செய்ததால் கத்தார் வெற்றியீட்டியது எனவும் செப் பிளாட்டர் கூறினார்.

உலக கிண்ண கால்பந்தாட்ட  சுற்றுப்போட்டி நவம்பர் 20 முதல் டிசெம்பர் 18 ஆம்  திகதி கத்தாரில் நடைபெறவுள்ளது. மத்திய கிழக்கு நாடொன்றில் இச்சுற்றுப்போட்டி நடைபெறவுள்ளமை இதுவே முதல் தடவையாகும். 

கத்தாரில் உலகக் கிண்ண அரங்குகளை நிர்மாணிப்பதில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நடத்தப்படும் விதம் குறித்து கவலைகளை தெரிவிக்கப்பட்டதால், உலகக்கிண்ண போட்டிகளை நடத்தும் நாட்டை தெரிவு செய்வதற்கான தனது அளவுகோல்களை 2012 ஆம் ஆண்டு பீபா மாற்றம் செய்தாகவும் செப் பிளாட்டர் கூறியுள்ளார்.

17 ஆண்டுகள் பீபா தலைவராக பதவி விகத்த செப் பிளாட்டர், 20 மில்லியன் சுபிஸ் பிராங்ககைளை சட்டவிரோதமாக மைக்கல் பிளாட்டியினின் கணக்குக்கு மாற்ற ஏற்பாடு செய்த குற்றச்சாட்டையடுத்து 2015 ஆம் ஆண்டு ராஜினாமா செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டார். மைக்கல் பிளாட்டினும் பீபாவின் தொழில்நுட்ப அபிவிருத்திக் குழு பதவியிலிருந்து ராஜினாமா செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டார்.

புpன்னர் பிளாட்டர், பிளாட்டினி இருவரும் ஒழுக்க விதிகளை மீறிய குற்றச்சாட்டுகளினால், கால்பந்தாட்டம் தொடர்பான செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு பீபாவினால் தடை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31