சொகுசு வீட்டில் கசிப்பு தயாரிப்பு : பெண் உட்பட இருவர் கைது

28 Nov, 2016 | 02:03 PM
image

கட்டானை பிரதேசத்தில்  இரட்டை மாடிகளைக்கொண்ட சொகுசு வீடொன்றில் சட்டவிரோதமாக இயங்கிவந்த கசிப்பு தயாரிப்பு நிலையத்தை நீர்கொழும்பு பொலிஸார் சுற்றி வளைத்து பெண் ஒருவர் உட்பட இரண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதோடு பெரும் தொகையான மதுபானத்தையும் உபகரணங்களையும்  கைப்பற்றியுள்ளனர். 

கட்டானை, கொந்தகே சந்தி, லூர்து மாவத்தையில் இந்த சட்ட விரோத தயாரிப்பு நிலையம் இயங்கி வந்துள்ளது. 

  பொலிஸார் சுற்றிவளைப்பை மேற்கொண்டபோது கசிப்பு தயாரிப்பு வேலைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்துள்ளன. 

20 இலட்சம் ரூபா பெறுமதியான   கோடா மதுபானங்கள், மதுபானம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட உபகரணங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கட்டானை கொன்கொஸ் சந்தியைச் சேர்ந்த  பெட்ரீஸியா பெரேரா, தெமங் சந்தியைச் சேர்ந்த  அக்கலங்க சில்வா ஆகியோரே கைது செய்யப்பட்ட சநதேக நபர்களாவர். 

சந்தேக நபர்கள் இருவரும் சொகுசு வீடுகள் மூன்றை  அதிக தொகைக்கு வாடகைக்கு பெற்று அதில் ஒரு வீட்டில் சட்டவிரோத மதுபான தயாரிப்பு நிலையத்தை நடத்தி வந்துள்ளனர். இந்த வீடுகள் இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்களுக்கு சொந்தமானதாகும்.

சந்தேக நபர்களை மன்றில்  ஆஜர் செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51