உணவு பாதுகாப்பு விசேட திட்டம் முல்லைத்தீவில் ஆரம்பித்து வைப்பு!

Published By: Digital Desk 5

08 Nov, 2022 | 04:57 PM
image

கே .குமணன் 

பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான உல உணவுத் திட்டத்தின் நிவாரணம் வழங்கும் நடவடிக்கை முல்லைத்தீவு நகரில் இன்று (08) நடைபெற்றுள்ளது.

இலங்கையில் உணவு பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் நோக்கில் உலக உணவுத்திட்டத்தினால் முல்லைத்தீவு மாவட்டமும் தெரிவு செய்யப்பட்டுள்ளது பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணமும்,நிவாரணமும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 3083 குடும்பங்களுக்கு தலா 15 ஆயிரம் ரூபா பணம் வெஸ்ரன் யூனியன் ஊடாக முதற்கட்டமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக 9ஆயிராத்தி 577 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது சமூர்த்தி பயனாளிகளுக்கு சமூர்த்தி வங்கி ஊடாக தற்போது வழங்கப்பட்டு வருகின்றது 

 புள்ளிவிபர ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களுக்கு 60 நாட்களுக்கு தேவையான உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.50 கிலோ அரிசி,20 லிலோ பருப்பு,5 லீற்றர் உணவு எண்ணெய் என்பன இதன்போது பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆறு பிரதேச செயலாளர் பிரிவின் கீழும் 19 ஆயிரத்தி 890 குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்படவுள்ளன.

முல்லைத்தீவு நகரில் அமைந்துள்ள கரைதுறைப்பற்று பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் கிழையில் வைத்து தவைர் ந.புகழ்வேந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன்,உலக உணவுத்திட்டத்தின் இலங்கைக்காக இணைப்பாளர்,மற்றும் மாவட்ட செயலக அதிகாரிகள் பிரதேச செயலாளர்,திட்டமிடல் பணிப்பாளர்,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராமசேவையாளர்,சமுர்த்தி உத்தியோகத்தர் என பலர் கலந்து கொண்டு மக்களுக்கான உலர் உணவு பொதியினை வழங்கி வைத்துள்ளார்கள்.

தொடர்ந்து ஏனைய பிரதேசங்களிலும் தெரிவு செய்யப்பட்ட மக்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்டவுள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51