நாணய நிதியத்தின் ஆலோசனைக்கு அமைய மத்திய வங்கியின் ஆளுநர் செயற்படுகிறார் - விமல்

Published By: Digital Desk 5

08 Nov, 2022 | 04:49 PM
image

(இராஜதுரை ஹஷன்,எம்.ஆர்.எம்.வசீம்)

சர்வதேச நாணய நிதியத்தின் ஓய்வூதிய கொடுப்பனவை மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் பெறுகிறார். நாணய நிதியத்தின் ஆலோசனைக்கு அமைய ஆளுநர் செயற்படுகிறார்.

ஆகவே இவரின் பொறுப்புக் கூறல் எத்தன்மையானது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச சபையில் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (08) இடம்பெற்ற நாட்டின் தற்போதைய நிலைவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நல்லாட்சி அரசாங்கம் நாட்டுக்கு எதிரான ஒப்பந்தங்களை கைச்சாத்திட முயற்சிக்கும் போது அதற்கு எதிராக அப்போதைய எதிர்க்கட்சியினர் என்ற ரீதியில் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினோம்.

நல்லாட்சியின் அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியில் தேசிய பாதுகாப்பு பலவீனம்,தேசிய பொருளாதார வீழ்ச்சி உள்ளிட்ட விடயங்களை நாட்டு மக்களுக்கு சுட்டிக்காட்டினோம்.

நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக நாட்டுக்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை வழங்கினார்கள்.

ரணில் விக்கிரமசிங்கவை விரட்டியடிக்க வேண்டும் என குறிப்பிட்ட பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் தற்போது அவரை புகழ்பாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமை வருத்தத்திற்குரியது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஓய்வூதிய சம்பளம்,மத்திய வங்கியின் ஆளுநர் பதவிக்கான சம்பளம் என மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் மாதம் இரண்டு கொடுப்பனவுகளை பெறுகிறார்.

இவரது பொறுப்புக் கூறல் எத்தன்மையானது என்பதை ஆராய வேண்டும். சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைகளுக்கு அமையவே மத்திய வங்கியின் ஆளுநர் செயற்படுகிறார்.

கடுமையான நிபந்தனைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.இதன் தாக்கத்தை நடுத்தர மக்கள் எதிர்கொண்டுள்ளார்கள்.

நடுத்தர மக்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார பாதிப்பு குறித்து ஜனாதிபதி கவனம் செலுத்தவில்லை. மக்கள் குறித்து அவருக்கு அக்கறை கிடையாது.

சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் நிதி உதவியை பெற்றுக்கொள்ள அரசாங்கம் கடுமையான நிபந்தனைகளை அமுல்படுத்தியுள்ளது.

நாணய நிதியத்தை தவிர்த்து அரசாங்கம் எவ்வித மாற்றுத் திட்டங்களும் கிடையாது.சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொண்ட ஆஜன்டினாவின் நிலையே இலங்கைக்கும் ஏற்படும்.

1980ஆம் ஆண்டு ஆஜன்டினா வங்குரோத்து நிலை அடைந்தது.இன்று வரை ஆஜன்டினா பொருளாதார பாதிப்பில் இருந்து மீட்சிப் பெறவில்லை.ஆகவே நாணய நிதியத்தை தவிர்த்து பொருளாதார பாதிப்பில் இருந்து மீளும் திட்டத்தை அரசாங்கம் முன்வைக்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04