அவுஸ்­தி­ரே­லி­யாவில் நபரொருவர் தனது இளமைக் காலத்தில் மாடு ஒன்­றுடன் பாலியல் உறவில் ஈடு­ப­டு­வ­தற்கு தன்னை ஒருவர் நிர்ப்­பந்­தித்­த­தாக குற்றம் சுமத்­தி­யுள்ளமை மக்கள் மத்தியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

55 வய­தான அலன் கென்னத் புரூக்ஸ் எனும் நபர் மீதே அவர் இக்­குற்­றச்­சாட்டை சுமத்­தி­யுள்ளார். தனது சிறு பரு­வத்தில் நடந்த இந்த சம்­ப­வத்தை தான் பணி­யாற்­றிய நிறு­வ­னத்தின் நண்பர்கள்கள் பின்னர் அறிந்­து­கொண்­டதால் தனது வாழ்க்கை பாதிக்­கப்­பட்­ட­தாக அவர் நீதி­மன்­றத்தில் தெரி­வித்­துள்ளார்.

இந்­நபர் சிறு­வ­னாக இருந்­த­போது அலன் கென்னத் புரூக்­ஸினால் பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­டது. இது தொடர்­பான வழக்கில் அலன் கென்னத் புரூக்ஸ் குற்­ற­வாளி என கடந்த செப்­டெம்பர் மாதம் தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டது. மிரு­கத்தை பாலியல் நட­வ­டிக்­கையில் ஈடு­ப­டுத்­திய குற்­றச் ­சாட் ­டை யும் புரூக்ஸ் ஒப்­புக்­கொண்டார். 

கடந்த வாரம் சிட்­னி­யி­லுள்ள டோனிங் மாவட்ட நீதி­மன்றில்  குறித்த வ­ழக்கு விசா­ரணை எடுத்துக்கொண்ட வேளையில், பாதிக்­கப்­பட்ட நபர் நான் தான்  என்று தான் பணியாற்றும் நிறு­வ­னத்தின் சக பணியாளர்கள் அறிந்­து­ கொண்­டமையால், அவர்களால் தான் கேலிக்கு ஆளா­ன­தா­கவும் அதனால் தான் வேலைக்குச் செல்­வதை நிறுத்­தி­விட்­ட­தா­கவும் சாட்­சி­ம­ளித்த நபர் தெரிவித்தார். 

குறித்த வழக்கில் குற்றவாளியான அலன் கென்னத் புரூக்ஸுக்கான தண்டனை எதிர்வரும் வருடம்  பெப்ரவரி மாதம் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.