குடியரசுக் கட்சிக்கு வாக்களிக்குமாறு இலோன் மஸ்க் சிபாரிசு

Published By: Sethu

08 Nov, 2022 | 10:33 AM
image

அமெரிக்காவில் இன்று நடைபெறும் தேர்தல்களில் குடியரசுக் கட்சியினருக்கு வாக்களிக்குமாறு தான் சிபாரிசு செய்வதாக டுவிட்டர் நிறுவனத்தின் புதிய உரிமையாளரும் உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரருமான இலோன் மஸ்க் கூறியுள்ளார். 

அமெரிக்க நாடாளுமன்ற கீழ்சபையின் அனைத்து 435 உறுப்பினர்களும், 100 செனட் உறுப்பினர்களில் 35 பேரும் 39 மாநிலங்கள், பிராந்தியங்களின் ஆளுநர்களும் இத்தேர்தல்களில் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க ஜனாதிபதியின் பதவிக்காலத்தின் நடுப்பகுதியில் இத்தேர்தல்கள் நடைபெறுவதால், இடைக்காலத் தேர்தல்கள் என  இத்தேர்தல்கள் குறிப்பிடப்படுகின்றன.

ஜனாதிபதி ஜோ பைடனின் ஜனநாயகக் கட்சியும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரப்பின் குடியரசுக் கட்சியும் இத்தேர்தலில் பிரதான கட்சிகளாக உள்ளன.

இந்நிலையில், 'சுயாதீன மனம் கொண்ட வாக்காளர்களுக்கு' என ஆரம்பித்து இலோன் மஸ்க் வெளியிட்டுள்ள பதிவில், பகிரப்பட்ட அதிகாரம் இரு கட்சிகளினதும் மோசமான மிகையானவைகளை கட்டுப்படுத்துகிறது. எனவே, ஜனாதிபதி பதவி ஜனநாயகக் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், குடியரசுக் கட்சியைக்கொண்ட காங்கிரஸுக்கு வாக்களிக்குமாறு நான் சிபாரிசு செய்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவிலுள்ள மக்களில் பெரும்பாலானோரைப் போன்று, ஜனநாயகக் கட்சியின் சில கொள்கைகளையும் குடியரசுக் கட்சியின் சில கொள்கைகளையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அனைத்து கொள்கைகளையும் அல்ல, 

எனினும், நிறைவேற்று அதிகாரமும், சட்டவாக்கல் கிளைகளும் ஒரே கட்சியினால் ஆதிக்கம் செலுத்தப்படுமாக இருந்தால் அதிகார சமநிலையை நாம் இழந்துவிடுவோம்' என இலோன் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52