பொதுஜன பெரமுன சிரேஷ்ட உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவார்கள் - நாலக கொடஹேவா

Published By: Digital Desk 5

08 Nov, 2022 | 09:24 AM
image

(இராஜதுரை ஹஷான்)

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியின் பெரும்பாலான உறுப்பினர்கள் நிலையான அமைச்சரவையில் அமைச்சு பதவிகளை பெற்றுக் கொள்வார்கள். 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவார்கள். அரசாங்கத்தின் உள்ளக பிரச்சினை பொருளாதார நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தும் என பாராளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான பொதுஜன பெரமுனவின் அரசாங்கத்தின் உள்ளக பிரச்சினை நாளுக்கு நாள் தீவிரமடைந்து உள்ளது. அரசாங்கத்தின் உள்ளகப் பிரச்சினைகள் தற்போதைய பொருளாதார நெருக்கடியை மென்மேலும் தீவிரப்படுத்தும்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஒரு சில சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவி வழங்குவதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மறுத்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகள் மறுக்கப்படுவதால் கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 14ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார். இதனை தொடர்ந்து நிலையான அமைச்சரவையை ஸ்தாபிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பெரும்பாலான உறுப்பினர்கள் நிலையான அமைச்சரவையில் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்வார்கள் மறுபுறம் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஒருசில சிரேஷ்ட உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இருந்து விலகி பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுவார்கள்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் உள்ளக பிரச்சினைகளினால் தற்போதைய பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமடையும். வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் அரசியலில் பல திருப்புமுனையான சம்பவங்கள் இடம்பெறும்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு கானல் நீராக காணப்படுகிறது.கடன் மறுசீரமைப்பு தொடர்ந்து தாமதப்படுத்தப்பட்ட நிலையில் காணப்படுகிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர் மட்ட நிபந்தனைகளை அரசாங்கம் இதுவரை செயல்படுத்தவில்லை.ஊழல் மோசடிக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அரச கொடுக்கல் வாங்கல்களில் மோசடி தவிர்க்கப்படவில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47