SOS Children’s Villages Sri Lanka அமைப்புடன் கைகோர்த்துள்ள நெஸ்லே லங்கா நிறுவனம்

Published By: Digital Desk 5

07 Nov, 2022 | 08:06 PM
image

நெஸ்லே லங்கா நிறுவனம், நாடு முழுவதும் உள்ள ஐந்து SOS Children’s Villagesகளுக்கு உதவிகளை வழங்குவதற்காக, அவ்வமைப்புடன் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கையெழுத்திட்டது. 

அனுராதபுரம், காலி, யாழ்ப்பாணம், மொனராகலை மற்றும் நுவரெலியா ஆகிய பகுதிகளில் உள்ள 600 க்கும் மேற்பட்ட சிறுவர்களின் வாழ்வை எட்டி, ‘நல்லுணவு, நல்வாழ்வு’ நிறுவனத்தின் பங்களிப்பானது, இந்த சவால்மிக்க காலகட்டத்தின் போது அவர்களை வளப்படுத்த உதவும் வகையில், ஆறு மாத காலத்திற்கு அவர்களின் உணவு மற்றும் போஷாக்கு தேவைகளை பூர்த்தி செய்ய வழிவகுத்துள்ளது. 

நெஸ்லே லங்கா நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரான திரு. ஜேசன் அவன்சென்யா அவர்கள் இந்த கூட்டாண்மை குறித்த தனது கருத்துகளைப் பகிர்ந்துகொள்கையில், “நெஸ்லே லங்கா நிறுவனம், இந்த சவால்மிக்க காலகட்டத்தில், சத்தான உணவு மற்றும் பானங்களைத் தொடர்ந்து வழங்குவதன் மூலம் மட்டுமல்லாமல், மிகவும் உதவி தேவைப்படுகின்றவர்களை மையமாகக் கொண்டு, சமூகங்களுக்கு அதிகரித்த அளவில் ஆதரவளிப்பதற்கு எங்கள் பங்கை ஆற்றுவதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். 

இன்றைய சவால்களின் தாக்கம் எல்லாத் தரப்பு மக்களாலும் உணரப்பட்டாலும், சிறுவர்கள் போன்ற ஏனையவர்களை விடவும் பாதிக்கப்படக்கூடியவர்கள் பலர் உள்ளனர். 

இதனாலேயே எமது நாட்டின் எதிர்கால சந்ததியினர் மீது அக்கறை கொள்வதற்காக அயராது உழைக்கும் நிறுவனமாகிய SOS Children’s Villages Sri Lanka அமைப்பிற்கு எமது உதவிகளை வழங்குவதில் பெருமிதம் கொள்கிறோம். 

இலங்கைக்கு பிரதியுபகாரத்தை வழங்கும் எமது பயணத்தில், ஆரோக்கியமான சிறுவர்களை வளர்ப்பதற்கான அவர்களின் முயற்சிகளில் இந்த மதிப்பிற்குரிய இந்த அமைப்பிற்கு பங்களிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்,” என்று குறிப்பிட்டார். 

“SOS Children’s Villages Sri Lanka அமைப்பானது நெஸ்லே லங்கா நிறுவனத்தை ஒரு நிறுவனக் கூட்டாளராகக் கொண்டிருப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. 

இந்த இக்கட்டான நேரத்தில் SOS Children's Villages Sri Lanka களில் உள்ள எங்கள் சிறுவர்களின் வாழ்க்கையைப் பிரகாசமாக்க நெஸ்லே லங்கா போன்ற எமது அனைத்து நிறுவன கூட்டாளர்களும் மேற்கொண்டு வருகின்ற முயற்சிகளை நான் மனதார பாராட்டுகிறேன். 

நாளைய தலைமுறையாக மாறப்போகும் இன்றைய சிறுவர்களுக்கு மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான பிள்ளைப் பருவத்தை வழங்குவதன் மூலம் சமூகத்திற்கு நேர்மறையான பங்களிப்பை வழங்குவதற்காக நெஸ்லே லங்கா நிறுவனத்துடன் இணைந்து நீண்டகால கூட்டாண்மையுடன் பணியாற்ற ஆவலாக உள்ளோம,;” SOS Children's Villages Sri Lanka  இன் தேசிய பணிப்பாளரான திரு. திவாகர் இரத்னதுரை அவர்கள் குறிப்பிட்டார். 

‘தற்போதைய மற்றும் எதிர்கால தலைமுறைகள் என அனைவரதும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு உணவின் ஆற்றலை வெளிக்கொண்டு வருதல்’ என்ற அதன் நோக்கத்தால் உந்தப்பட்டு, நெஸ்லே நிறுவனம் இலங்கையில் தலைமுறை தலைமுறையாக இளமை முதல் முதுமை வரை உயர்தர உணவு மற்றும் பான வகைகள் மூலம் ஊட்டமளித்துள்ளது. 

1906 ஆம் ஆண்டு இலங்கையில் தனது செயற்பாடுகளை ஆரம்பித்து, இன்று, நெஸ்லே இலங்கை மக்களின் வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறியுள்ளது. 

25,000 க்கும் மேற்பட்ட இலங்கை பால் உற்பத்தி மற்றும் தென்னை விவசாயிகள் மற்றும் வீடுகளில் தென்னை வளர்ப்பவர்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்திற்கு பங்களித்து வருவதுடன், 800 க்கும் மேற்பட்டவர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பினை வழங்கியுள்ளது. 

கடுமையான பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தி, குருநாகலிலுள்ள தனது அதிநவீன தொழிற்சாலையில், இலங்கையில் விற்பனை செய்யப்படும் 90மூ க்கும் அதிகமான தயாரிப்புகளை உற்பத்தி செய்கிறது.

தொடர்புகளுக்கு:

நிறுவன பொது விவகாரங்கள் - தமித குலதுங்க Kulatunga - +94777915949

நிறுவன தொடர்பாடல்கள்      - இசுரி அழககோன் -  +94760395781

புகைப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சி:


இடமிருந்து வலமாக: SOS Children’s Villages Sri Lanka இன் நிதி மேம்பாடு மற்றும் தொடர்பாடல்களுக்கான பணிப்பாளரான திரு. கயந்த தல்பதாதேர் SOS Children’s Villages Sri Lanka இன் தேசிய பணிப்பாளரான திரு. திவாகர் இரத்னதுiர் நெஸ்லே லங்கா நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரான திரு. ஜேசன் அவன்சென்யர் நெஸ்லே லங்கா நிறுவனத்தின் தொடர்பாடல்களுக்கான உதவித் துணைத் தலைமை அதிகாரியான திருமதி ரதினி டி கொஸ்தா  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Yamaha மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களுக்காக பிரத்தியேகமாக...

2024-03-28 10:39:07
news-image

Samsung Sri Lanka ஆனது 35%...

2024-03-27 10:43:06
news-image

பருக்களுக்கு விடைகொடுத்திடும் : பியுரிஃபைங் நீம்...

2024-03-27 10:19:07
news-image

கார்கில்ஸ் நிறுவனமானது பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு எதிரான...

2024-03-27 10:17:41
news-image

SampathCards உடன் இணைந்து  0% வட்டி...

2024-03-20 02:18:01
news-image

பெண்களுக்கு அதிகாரமளித்தல், சமூகங்கள் மத்தியில் மாற்றத்தை...

2024-03-20 02:13:22
news-image

2023ம் ஆண்டின் நாலாம் காலாண்டில் குறிப்பிடத்தக்க...

2024-03-20 02:05:24
news-image

Francophonie 2024 – மார்க் அய்மன்...

2024-03-18 15:26:06
news-image

சியபத பினான்ஸ் பிஎல்சீ, பதுளை ஸ்ரீ...

2024-03-18 14:49:36
news-image

9 ஆவது வருடமாக கொழும்பு பங்குசந்தை...

2024-03-14 21:40:35
news-image

கொரியன் எயார்லைன்ஸுடன் கைகோர்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

2024-03-14 21:46:34
news-image

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய மக்கள்...

2024-03-12 11:20:57