விடு­த­லைப் ­பு­லி­களின் தலைவர் பிர­பா­க­ரனின் பிறந்­த­தின விழாவில்  அவ­ருட­னான தனது நினை­வ­லை­களை பகிர்ந்­து ­கொண்ட ம.தி.மு.க. பொதுச் ­செ­ய­லா­ளர்  வைகோ  விடு­தலைப் புலி­களின் தலை­வரின் விருப்பம் ஈழத்தின் தலை­வ­ராக அதி­கா­ரத்தில் இருப்­பது அல்ல. மாறாக  போரில் உடல் உறுப்­பு­களை இழந்­த­வர்கள், கண­வனை இழந்த பெண்கள், பிள்­ளை­களை இழந்த பெற்­றோர்­க­ளுக்கு ஆறுதல் கொடுக்­கின்ற மறு­வாழ்வு அமைப்­புக்கு தலை­வ­ராக இருக்­க­வேண்டும் என்­பதே ஆகும் என்று தெரி­வித்­துள்ளார். 

இது தொடர்பில் வைகோ மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,

 உலகில் எந்த ஒரு விடு­தலை இயக்­கமும் பிற நாடு­களின் உதவி இன்றி முப்­ப­டை­களைத் தாமே உரு­வாக்­கிய வர­லாறு எங்­குமே கிடை­யாது. நான் உலக வர­லாற்றை ஓர­ள­வுக்குப் படித்து இருக்­கின்றேன். அதுவும் போர்க்­கள வர­லா­று­களை விரி­வா­கப் படித்து இருக்­கின்றேன். மாவோவின் போராட்­டங் கள், வியட்­நாமில் ஹோ சி மின் போராட்­டங்கள் அல்­லது சியாரா மாஸ்ட்ரா குன்­று­களில் பயிற்சி எடுத்த பிடல் காஸ்ட்ரோ, ஆஸ்­துமா நோயா­ளி­யாக இருந்த போதிலும் துப்­பாக்கி ஏந்திக் களத்தில் போரா­டிய சேகு­வேரா ஆகி­யோ­ரது போராட்ட வர­லா­று­களை எல்லாம் படித்து இருக்­கின்றேன். உலகம் போற்­று­கின்ற அந்த மாவீ­ரர்கள் எல்­லோ­ரையும் விடச் சிறந்­தவர் பிர­பா­கரன்.

அல்­ஜீ­ரியக் கிளர்ச்­சி­யாக இருக்­கட்டும், பிரெஞ்சுப் புரட்­சி­யாக இருக்­கட்டும் 15 வயது இளை­ஞ­னாக இருந்த போது வீட்டை விட்டு வெளி­யேறி, ஈழத்­தமிழ்த் தாய­கத்தின் விடு­த­லைக்­காகக் களத்தில் இறங்­கி­யவர் பிர­பா­கரன்.

தந்தை செல்வா காலத்தில் அற­வழிப் போராட்­டங்கள் எல்லாம் இரா­ணு­வத்தால் நசுக்­கப்­பட்டு, சின்­னஞ்­சிறு பிஞ்சுக் குழந்­தை­களைக் கொதிக்­கின்ற தாரில் தூக்கிப் போட்ட கொடு­மையைக் கேட்டுப் பொங்­கினார். 'இனி நாம் ஆயுதம் ஏந்திப் போரா­டி­னால்தான் தமி­ழர்­களைக் காப்­பாற்ற முடியும்' என்ற தீர்க்­க­மான முடிவில், படை அணி­களை உரு­வாக்­கினார் பிர­பா­கரன்.1987ஆம் ஆண்டு இந்­திய அமை­திப்­படை ஈழத்­துக்குள் நுழைந்த போது, வெறும் 28 பேரோடு வன்னிக் காட்­டுக்கு உள்ளே போனார். அப்­போது உடன் இருந்த அன்பு என்­கின்ற தம்பி இயக்­கத்தின் தமிழ் நாட்டுப் பொறுப்­பா­ள­ராக வந்தார். அவர் தற்­போது உயி­ருடன் இல்லை. களத்தில் மாண்­டு­விட்டார். அவர் அடிக்­கடி என் வீட்­டுக்கு வருவார்.

அவர் சொல்வார்: ‘அண்ணா, நாங்கள் 28 பேர்தான் இருந்தோம். சுற்­றிலும் இலட்சம் பேர் கொண்ட இந்­திய இரா­ணுவம் நிற்­கின்­றது. அந்த வேளையில் அரி­சியோ, சாப்­பாடோ கொண்டு வரு­வ­தற்குப் பதி­லாக, கண்ணி வெடி தயா­ரிப்­ப­தற்­கான பொருட்­களைத் தலைச்­சு­மை­யாகத் தூக்கிக் கொண்­டுதான் நடந்தோம்.

ஒரு நாளைக்கு ஒரு டம்ளர் உப்பு இல்­லாத கஞ்­சிதான் உணவு. அப்­போது யாருக்­கா­வது கொஞ்சம் உப்புக் கஞ்சி கிடைத்தால், அன்­றைக்கு அவன்தான் பிரபு. அந்த ஒரு டம்ளர் கஞ்­சி­யைத்தான் தலை­வரும் சாப்­பிட்­டுக்­கொண்டு இருந்தார். அப்­போது நாங்கள் எல்லாம் எப்­ப­டியும் சாகத்தான் போகின்றோம். நல்லாச் சாப்­பிட்டு சாவோமே? எதற்­காகத் தலைவர் இப்­படிக் கஷ்­டப்­ப­டு­கின்றார்? இந்­திய இரா­ணு­வத்தை எதிர்ப்­பது நடக்­குமா? என்­றுதான் நினைத்தோம். ஆனால், என்னைப் போன்ற வீரர்­க­ளுக்குத் தோன்­றாத யோச­னைகள் ஒரு படைத்­த­லை­வ­னுக்­குத்தான் தோன்றும். அப்­ப­டித்தான் எங்கள் படை 100, 200, 300, 400 என்று பெரு­கி­யது. அப்­படி உரு­வானோம்' என்று சொன்னார்.

அப்­ப­டிப்­பட்ட தலைவர் பிர­பா­கரன் வான் படை அமைத்தார். கடற்படை அமைத்தார். பிர­பா­க­ரனின் விருப்பம் என்ன?அவ­ரது நோக்கம் என்ன தெரி­யுமா? நான் அந்த வன்னிக் காட்­டுக்குள் அவ­ரோடு 22 நாட்கள் இருந்­த­போது மனம் விட்டுப் பேசினேன். அப்­போது அவர் சொன்னார்:

''அண்ணே, தனி ஈழம் கிடைத்தால் அதற்கு நான் அதிபர் ஆக வேண்டும் என்ற விருப்பம் எதுவும் கிடை­யாது. இரண்டே இரண்டு ஆசை­கள்தான். ஒன்று, போரில் உடல் உறுப்­பு­களை இழந்­த­வர்கள், கண­வனை இழந்த பெண்கள், பிள்­ளை­களை இழந்த பெற்­றோர்­க­ளுக்கு ஆறுதல் கொடுக்­கின்ற மறு­வாழ்வு அமைப்­புக்கு நான் தலை­வ­ராக இருப்பேன்.

இன்­னொன்று, ராஜேந்­திர சோழன் கடற்­ப­டையால் தென் கிழக்கு ஆசிய நாடு­களை வென்­றானே, அவன் தூக்­கிய புலிக்­கொ­டி­யைத்தான் நாங்கள் எங்கள் கொடி­யாக ஆக்கி இருக்­கின்றோம். அப்­படி ஒரு வலி­மை­யான கடற்­படை ஈழத்­துக்கு அமைய வேண்டும். அது இந்­தி­யா­வுக்கும் பாது­காப்­பாக இருக்கும். இந்த இரண்­டும்தான் எனது ஆசைகள் அண்ணா' என்றார். அதே­போ­லத்தான், தள­பதி சூசை தலை­மையில் கடற்­படை அமைத்தார். வான் படை, கடல் படை, தரைப்­படை அமைத்தார் பிர­பா­கரன். அந்த விடு­தலைப் புலி­களை அழிக்க இந்­தியா பணம் கொடுத்­தது மட்டும் அல்ல. உலகின் அணு ஆயுத வல்­ல­ர­சு­க­ளான ஏழு நாடுகள் இலங்கை அர­சுக்கு உத­வின. இந்­தி­யாவும் பாகிஸ்­தானும் பகை நாடுகள். ஆனால் இலங்­கைக்கு இந்­தி­யாவில் இருந்தும், பாகிஸ்­தானில் இருந்தும் ஆயுதம், சீனாவில் இருந்து ஆயுதம் கொடுத்­தார்கள். ஈரானும் இஸ்­ரேலும் பிறவிப் பகை­வர்கள். ஆனால், இரண்டு நாடு­களும் இலங்­கைக்கு உத­வின. அமெ­ரிக்­காவும் கொடுத்­தது, ரஷ்­யாவும் கொடுத்­தது. இவ்­வ­ளவு பேரும் சேர்ந்து கொண்­டுதான் அவர்­களை அழிக்­கின்ற முயற்­சி­களில் ஈடு­பட்­டார்கள்.

இப்­போது இலங்­கையில் நமது தமிழ் இளை­ஞர்­களைச் சிதைப்­ப­தற்குக் கடு­மை­யாக முயற்­சித்துக் கொண்டு இருக்­கின்­றார் கள். மதுக்­க­டை­களைத் திறந்து இருக்­கின்­றார்கள். போதைப்பொருட்­களை நட­மாட விட்­டி­ருக்­கின்­றார்கள். பெண்­க­ளுக்குப் பாது­காப்பு இல்லை. நினைத்துப் பார்க்க முடி­யாத கேடுகள் தமிழ்ச் சமூ­கத்தைச் சூழ்ந்து விட்­டன. தமிழர் தாயகப் பகு­தி­களில் இரா­ணுவ வீரர்­க­ளுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்துக் குடியமர்த்­து­கின்­றார்கள். தமி­ழர்­க­ளிடம் இருந்து பறித்த காணி­களைத் திரும்பத் தர­வில்லை.

ஏற்­கனவே கிழக்கு மாகா­ணத்தை அவர்கள் ஆக்­கி­ர­மித்து விட்­டார்கள். இப்­போது வடக்­கிலும் அந்த முயற்­சிகள் வேக­மாக நடை­பெற்றுக் கொண்டு இருக்­கின்­றன.அயல் ­நா­டு­க­ளுக்குத் தமி­ழர்கள் குடி­பெ­யர்ந்­த­தாலும், போரி­னாலும் தமிழ் மக்­களின் எண்­ணிக்கை குறைந்­து­கொண்டே போகின்­றது. இன்­றைக்கு உலகில் தமி­ழர்கள் மட்­டுமே வாழ்­கின்ற பகுதி எது என்றால் தமிழ் ஈழம்தான். வடக்கு கிழக்கு மாகா­ணங்­கள்தான். அந்தத் தமிழர் பகுதி என்­கின்ற அடை­யா­ளத்தைத் துடைத்து எறி­வ­தற்­காகக் குறி­வைத்து இயங்கிக் கொண்டு இருக்­கின்­றார்கள். காணாமல் போன­வர்­களின் கதி என்ன என்றே தெரி­ய­வில்லை.

100 ஆண்­டு­க­ளுக்கு முன்பு துருக்­கியில் இலட்சக்­க­ணக்­கான அர்­மீ­னி­யர்கள் படு­கொலை செய்­யப்­பட்­டார்­களே, அது இனப்­ப­டு­கொ­லைதான் என்று ஜேர்­மனி பாரா­ளு­மன்றம் இந்த ஆண்டு கண்­டனத் தீர்­மானம் நிறை­வேற்றி இருக்­கின்­றது. எனவே, எத்­தனை ஆண்­டுகள் ஆனாலும் ஈழத்­த­மி­ழர்­க­ளுக்கு நீதி கிடைக்­காமல் போகாது. தமிழ்­நாட்டில் ஏழரைக் கோடிப் பேர் இருக்­கின்றோம். வருங்­கால இளை­ஞர்கள் நம்மை விட வேக­மாகச் சிந்­திப்­பார்கள். நமது தொப்புள் கொடி உற­வு­களின் படு­கொ­லைக்கு நீதி கேட்­பார்கள். நீதியை நிலை­நாட்ட முடியும் என்ற நம்­பிக்கை எனக்கு இருக்­கின்­றது.ஆனால், இனி ஆயுதப் போருக்கு வாய்ப்பு இல்லை. தமிழ் ஈழத்துக்கு உலக நாடுகளின் மேற்பார்வையில் ஒரு பொது வாக்கெடுப்பு நடந்து தமிழீழம் ஒருநாள் மலரும் என்றார்.