இந்தியாவின் கடற்படை தளபதி அட்மிரல் சுனில் லன்பா 5 நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

இந்த விஜயத்தின் போது இருநாடுகளுக்குமிடையிலான கடற்பாதுகாப்பை அதிகரித்தல், பலப்படுத்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.

இதேவேளை குறித்த விஜயத்தின் போது ஜனாதிபதி, பிரதமர்  மற்றும் பாதுகாப்பு துறையின் முக்கிய உயர் அதிகாரிகளை சந்திக்கவுள்ளார்.

இந்நிலையில் இன்று  இந்திய கடற்படை தளபதி “ 2016 காலி கலந்துரையாடல்“ எனும் தொனிப்பொருளில் இடம்பெறும் கடல் பாதுகாப்பு மாநாட்டில் கலந்துக்குகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.