நட்டத்தில் இயங்கிவரும் அரச நிறுவனங்களை இணக்கப்பாட்டுடன் தனியார் மயப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஐக்கிய தேசிய கட்சி கோரிக்கை

Published By: Digital Desk 2

07 Nov, 2022 | 08:00 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

நட்டமடைந்து வரும் அரச நிறுவனங்களுக்கு தொடர்ந்தும் பணம் மூதலீடு செய்வதால் அத்தியாவசிய சேவைகளுக்கு போதுமான நிதி ஒதுக்கீடுகளை செய்ய முடியாமல் இருக்கின்றது. அதனால் அரசாங்கம்  இணக்கப்பாட்டுடன் அவ்வாறான நிறுவனங்களை தனியார் மயமாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். அத்துடன் அந்த நடவடிக்கைக்கு பாராளுமன்றத்தில் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது என ஐக்கிய தேசிய கட்சி லிபரல் இளைஞர் அமைப்பு தெரிவித்தது.

ஐக்கிய தேசிய கட்சி லிபரல் இளைஞர் அமைப்பு கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று (07) நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அதன் மேல்மாகாண தலைவர் இந்திக்க புஷ்பகுமார தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டை ஆட்சி செய்துவந்த அரசாங்கங்கள் அரச நிறுவனங்களை லாபமீட்டும் நிறுவனங்களாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தபோதும் சில நிறுவனங்கள் தொடர்ந்தும் நட்டத்திலேயே இருந்து வருகின்றன. அவ்வாறான நிறுவனங்களுக்கு அரசாங்கம் பாரியளவில் தொடர்ந்து பணம் முதலீடு செய்து வருகின்றபோதும் லாபமீட்டும் நிறுவனங்களாக மாற்ற முடியாமல் இருக்கின்றன. அதனால் இவ்வாறான நிறுவனங்கள் தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவுநிலை ! | Virakesari.lk

குறிப்பிப்பாக சிறிலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம் பாரியளவில் நட்டத்திலேயே தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றது. அந்த நிறுவனத்துக்காக வருடாந்தம் பாரியதொரு தொகை ஒதுக்கப்படுகின்றது. இவ்வாறு நட்டமடைந்து வரும் நிறுவனங்களுக்கு அரசாங்கம் பாரியளவில் நிதி ஒதுக்கி வருவதால், நாட்டின் அத்தியாவசிய துறைகளான கல்வி. சுகாதாரம் போன்றவற்றுக்கு போதுமான நிதியை செலவழிக்க முடியாமல் இருக்கின்றது.

அதனால் நாட்டின் முக்கிய நிறுவனங்களை மாத்திரம் அரசாங்கத்துக்கு கீழ் வைத்துக்கொண்டு, ஏனைய நட்டமைந்துவரும் நிறுவனங்களை முறையான இணக்கப்பாட்டுடன் தனியாருக்கு வழங்குவதே தற்போது செய்ய வேண்டிய விடயமாகும். ஏனெனில் நாடு பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில். தொடர்ந்தும் இவ்வாறான நிறுவனங்களுக்கு நிதி ஒதுக்குவதில் எந்த பிரயோசனமும் இல்லை. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இதுதொடர்ப்பில் கவனம் செலுத்தி வருவதை நாங்கள் காண்கின்றோம்.

அத்துடன் நட்டமடைந்து வரும் அரச நிறுவனங்களை இணக்கப்பாட்டுடன் தனியாருக்கு வழங்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கும்போது, அதற்கு பாராளுமன்றத்தில் அனைத்து கட்சி உறுப்பினர்களும் ஆதரவளிக்க வேண்டும் என்றே நாங்கள் கேட்கின்றோம். மேலும் வீழ்ச்சியடைந்திருக்கும் நாட்டை கட்டியெழுப்ப ஜனாதிபதி படிப்படியாக நடவடிக்கை எடுத்து வருகின்றார். அவர் எந்த நடவடிக்கை எடுத்தாலும் அதற்கு பிரதானமாக அரசாங்கத்தில் இருக்கும் பொதுஜன பெரமுன கட்சிகளின் ஆதரவு தேவைப்படுகின்றது. ஏனெனில் ஜனாதிபதிக்கு பாராளுமன்றத்தில் ஒரு ஆசனம் மாத்திரமே இருக்கின்றது. 

எனவே நாட்டை கட்டியெழுப்ப ஜனாதிபதி எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும். ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த அவருக்கு இரண்டு வருடங்களாவது வழங்கவேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47