முத்தரப்பு ஒருநாள் தொடர் இறுதிப் போட்டியில் ஜிம்பாப்வே அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய இலங்கை அணி சாம்பியனானது. ஆட்டமிழக்காமல் 57 ஓட்டங்களை பெற்ற அணித் தலைவர் உபுல் தரங்க, இறுதியாக ஆறு ஓட்டங்களை பெற்று போட்டி நிறைவு செய்தார். 

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று நடந்த இறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதியன.

இதில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய  ஜிம்பாப்வே அணி   36.3 ஓவரில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 160  ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

ஜிம்பாப்வே அணியில் அதிகபட்சமாக மசகண்டா 36 ஓட்டங்களும், சீன் வில்லியம்ஸ் 35 ஓட்டங்களும் எடுத்தனர்.

இலங்கை அணி சார்பில், வெந்தர்சே, குணரட்ன தலா 3 விக்கெட்டுகளையும், சச்சித் பதிரன 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

 161 ஓட்டங்கள்  என்ற இலகுவான வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை, 37.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 166 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.

ஆரம்ப வீரர்களாக தனஞ்ஜெய டி சில்வா, குசேல் பெரேரா ஆகியோர் களமிறங்கினர்.

தனஞ்ஜெய டி சில்வா முதல் பந்தில் ஓட்டம் எதனையும் பெற்றாது அதிர்ச்சியளித்தார்.

 குசேல் பெரேராவும் (14), அடுத்து வந்த டிக்வெல்லவும் (16) என ஏமாற்றமளித்தனர்.

இதனால் இலங்கை அணி நெருக்கடியான நிலையில் இருந்தது. இதன் பின்னர் ஜோடி சேர்ந்த குசேல் மெண்டிஸ், அணித்தலைவர் உபுல் தரங்க  ஆகியோர் நிதானமாக ஆடி அணியை மீட்டனர்.

 மெண்டிஸ் 57 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஆடிய உபுல் தரங்கவும் அரைசதம் அடித்தார்.

இதனால் இலங்கை அணி 37.3 ஓவரிலே 4 விக்கெட் இழந்து 166 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

அணித்தலைவர் உபுல் தரங்க இறுதிப் பந்தியில் ஆறு ஓட்டங்களை பெற்று போட்டியை முடித்து வைத்தார்.   குணரட்ன 16 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஜிம்பாப்வே அணி சார்பில், பிரைன் விட்டோரி 3 விக்கெட் வீழ்த்தினார்.