சூரியகுமார் யாதவ்வின் அதிரடியுடன் வெற்றியீட்டிய இந்தியா குழு 2இல் முதலிடம்

06 Nov, 2022 | 09:47 PM
image

(நெவில்)

ஸிம்பாப்வேக்கு எதிராக மெல்பர்ன் கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கடைசி சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டியில் 71 ஓட்டங்களால் இந்தியா அமோக வெற்றியீட்டியது.

இந்த வெற்றியுடன் குழு 2 அணிகள் நிலையில் 8 புள்ளிகளுடன் முதலாம் இடத்தைப் பெற்ற இந்தியா, குழு 1இல் இரண்டாம் இடத்தைப் பெற்ற இங்கிலாந்தை அடிலெய்ட் விளையாட்டரங்கில் எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ள இரண்டாவது அரை இறுதியில் விளையாடவுள்ளது.

இதேவேளை நியூஸிலாந்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான முதலாவது அரை இறுதிப் போட்டி சிட்னி விளையாட்டரங்கில் எதிர்வரும் 9ஆம் திகதி நடைபெறவுள்ளது.

ஸிம்பாப்வேக்கு எதிராக இன்று நடைபெற்ற போட்டியில் கே.எல். ராகுல், சூரியகுமார் யாதவ் ஆகியோர் குவித்த அரைச் சதங்களும் ரவிச்சந்திரன் அஷ்வினின் துல்லியமான பந்துவீச்சும் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றின.

இதனிடைய சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் இந்த வருடத்தில் மாத்திரம் 1000 ஓட்டங்களைப் பூர்த்தி செய்து சூரியகுமார் வரலாறு படைத்தார். ஒரே வருடத்தில் 1000 ஓட்டங்களைக் குவித்து இந்த வரலாற்றுச் சாதனையைப் படைத்த முதலாவது இந்தியர் சூரியகுமார் யாதவ் ஆவார்.

அத்துடன் பாகிஸ்தானின் மொஹமத் ரிஸ்வானுக்கு அடுத்ததாக சர்வதேச இருபது 20 கிரிக்கெட்டில் ஒரே வருடத்தில் 1000 ஓட்;டங்களைப் பூர்த்தி செய்த இரண்டாவது வீரரானார்.

கடந்த வருட்ம் மொஹமத் ரிஸ்வான் 1326 ஓட்டங்களை மொத்தமாக பெற்றிருந்தார்.

தென் ஆபிரிக்காவுக்கு எதிரான இன்றைய  போட்டியில் நெதர்லாந்து வெற்றிபெற்றதும் அரை இறுதியில் விளையாடுவதற்கான தகுதியை உறுதிசெய்துகொண்ட இந்தியா, அணிகள் நிலையில் முதலாம் இடத்தை அடைவதைக் குறிக்கோளாகக் கொண்டு ஸிம்பாப்வேயை எதிர்த்தாடியது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இந்தியா 20 ஓவர்களில் 5 விக்கெட்களை மாத்திரம் இழந்து 186 ஓட்டங்களைக் குவித்தது.

அணித் தலைவர் ரோஹித் ஷர்மா மீண்டும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறி 15 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். (25 - 1 விக்.)

எனினும் கே.எல். ராகுல், விராத் கோஹ்லி ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 48 பந்துகளில் 60 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு தெம்பூட்டினர்.

எனினும் விராத் கோஹ்லி (26), கே. எல். ராகுல் (51) ஆகிய இருவரும் 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டமிழந்தனர்.

இந்த வருட உலகக் கிண்ணப் போட்டியில் முதல் தடவையாக விளையாடிய ரிஷப் பன்ட் 3 ஓட்டங்களை மாத்திரம் பெற்றார். (101 - 4 விக்.)

எனினும் சூரியகுமார் யாதவ், ஹார்திக் பாண்டியா ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 35 பந்துகளில் 65 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்திய அணியை பலப்படுத்தினர்.

சூரியகுமார் யாதவ் வழமைபோல் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 25 பந்துகளில் 6 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் ஆட்டமிழக்காமல் 61 ஓட்டங்களைக் குவித்தார். ஹார்த்திக் பாண்டியா 18 ஓட்டங்களைப் பெற்றார்.

ஸிம்பாப்வே பந்துவீச்சில் சோன் வில்லியம்ஸ் 9 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

187 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே 17.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 115 ஓட்டங்களை மட்டும் பெற்று தோல்வி அடைந்தது.

துடுப்பாட்டத்தில் மத்திய வரிசை வீரர்களான சிக்கந்தர் ராஸா (34), ரெயான் பியூரி (35) ஆகிய இருவரே திறமையாகத் துடுப்பெடுத்தாடி 30 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

அவர்களை விட அணித் தலைவர் க்ரெய்க் ஏர்வின் (13), சோன் வில்லியம்ஸ் (11) ஆகிய இருவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

இந்திய பந்துவீச்சில் ரவிச்சந்திரன் அஷ்வின் 22 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையம் மொஹமத் ஷமி 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஹார்திக் பாண்டியா 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: சூரியகுமார் யாதவ்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35