(க.கமலநாதன்)

குருநாகல் பகுதியில் வைத்து உப பொலிஸ் பரிசோதகர் சுட்டு கொலை செய்த குற்றத்தின் பேரிலும் மேலும் இரு பொலிஸ் அதிகாரிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தி அவர்களை காயப்படுத்திவிட்டு தப்பிச் சென்ற சந்தேக நபர்களை கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்கள் உதவியை கோரியுள்ளனர்.

இம்மாதம் 15 ஆம் திகதியன்று குருணாகல் மாஸ்பொத பகுதியில் வைத்து இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளதெனவும்  இவர்கள் மூவரையும் அறிந்திருக்கும் பட்சத்தில் அது தொடர்பிலான தகவல்களை அறியத் தருபவர்களுக்கு பணப்பரிசில் வழங்க தயாராக உள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

எனவே குறிந்த சந்தேக நபர்களை அடையாளம் காண்பதற்கு அவர்களின் படங்களையும் அது தொடர்பில் அறிவதற்கான தொலை பேசி இலக்கங்களையும் பொலிஸ் ஊடகப்பிரிவினல் அறிவித்துள்ளனர். 

அதற்கமைய 011 2451633, 011 2451631,071 8592604,077 2001021 ஆகிய இலக்கங்களுக்கு அழைத்து தெரிவிக்குமாறு பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.