நித்தம் ஒரு வானம் - விமர்சனம்

Published By: Digital Desk 2

06 Nov, 2022 | 02:20 PM
image

தயாரிப்பு : வயாகாம் 18   ரைஸ் ஈஸ்ட் புரொடக்ஷன்ஸ்

நடிகர்கள் : அசோக் செல்வன், ரித்து வர்மா, அபர்ணா பாலமுரளி, சிவாத்மிகா ராஜசேகர் மற்றும் பலர்

இயக்கம் :ரா கார்த்திக்

மதிப்பீடு : 2.5 / 5

கதையின் நாயகனான அர்ஜுன், பால்ய பிராயத்திலிருந்து காமிக்ஸ் கதை புத்தகங்களையும், வேறு நூல்களையும் வாசிக்கும் பழக்கம் கொண்டவன். கதைகளில் வரும் கதாபாத்திரங்களில் கற்பனையாகத் தன்னைப் பொருத்திக் கொண்டு கதைகளை வாசிக்கும் நாயகன், வளர்ந்து இளைஞனாகி வேலைக்கு செல்கிறான்.

அவன் தன்னுடைய பணிகளில் உயர்தர சுகாதாரக் கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டு வாழ்கிறான். அவனுக்கு அவனது பெற்றோர்கள் ஒரு பெண்ணை பார்த்து நிச்சயம் செய்கிறார்கள். நிச்சயித்த பெண்ணுடன் இரண்டு மாத காலம் பழகுகிறான். திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்வில் பங்குபற்றும் இருவரும், திருமணம் செய்து கொள்ளவிருக்கும் தருணத்தில் மணப்பெண் தன்னுடைய காதலுடன் சென்றுவிடுகிறாள்.

இதனால் நாயகனின் திருமணம் தடை படுகிறது. இது அவனுக்கு பணியிட சூழலிலும், நண்பர்களின் வட்டாரத்திலும், உறவினர்களின் மத்தியிலும் அவமானத்தை அளித்துவிட்டதாக கருதி மன அழுத்தத்திற்கு ஆளாகிறான். அதிலிருந்து வெளியேறுவது எப்படி? என தெரியாமல் திணறும்போது, குடும்ப நண்பரான டொக்டர் ஒருவர், அவனுக்கு வாசிக்கும் பழக்கம் இருப்பதால், இரண்டு டைரிகளை அவனுக்கு படிக்குமாறு கொடுக்கிறார்.

அவன் அந்த இரண்டு டைரிகளில் எழுதப்பட்ட கதையை, தன்னுடைய வழக்கத்திற்கு ஏற்ப, தன்னைப் பொருத்திக் கொண்டு வாசிக்கிறான். ஆனால் கதையின் உச்சகட்ட காட்சி இல்லை. இதனால் தவித்து போய், டொக்டரிடம் கேட்க, அவரோ.. ‘அது கதையல்ல. நிஜமான இரண்டு காதலர்களின் கதை. அவர்களைப் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்றால், நீயாக அவர்களைத் தேடிச் சென்று தெரிந்து கொள்’ என சொல்கிறார். அதற்குப் பின் அந்த இரண்டு டைரிக்குள் எழுதப்பட்டிருக்கும் இரண்டு காதலர்களையும் சந்தித்தாரா? அவர்கள் இருவரும் நாயகன் எதிர்பார்ப்பது போல் இருந்தனரா? இல்லையா? என்பதுதான் ‘நித்தம் ஒரு வானம்’ படத்தின் திரைக்கதை.

பொதுவாக பயணம் தொடர்பான கதை என்றால், சாகச பயணம், புனித பயணம், தேனிலவு பயணம், ஆன்மீகப் பயணம், இன்ப சுற்றுலா.. என பலவகையான பயணங்கள் இருக்கிறது இந்தப் பயணத்தின் நோக்கமும் பயணிப்பவர்களின் மனமகிழ்ச்சியை சார்ந்தே இருக்கும். ஆனால் ‘நித்தம் ஒரு வானம்’ படத்தில் நாயகன் தன் மன அழுத்தத்திலிருந்து விடுபடவும், தான் வாசித்த இரண்டு கதையிலுள்ள காதலர்களின் இன்றைய நிலையை அறியவும் பயணத்தின் நோக்கமாக இருப்பதால்.. பார்வையாளர்களும் இயல்பாகவே நாயகனுடன் பயணிக்கத் தொடங்குகிறார்கள். பயணத்தில் நாயகன் சந்திக்கும் புதிய கதாபாத்திரங்கள் வாழ்வை பற்றிய நேர் நிலையான புரிதலை நாயகனுக்கு உணர்த்துகிறது. இதனால் ரசிகர்களுக்கும் இந்தப் படம் பிடித்துப் போகிறது.

இயக்குநரின் ரசனையான சிறு சிறு திருப்பங்கள், பார்வையாளர்களை ஆச்சரியப்பட வைக்கிறது. ஒளிப்பதிவும், இசையும் இயக்குநருக்கு வலு சேர்க்கும் வகையில் தோள் கொடுத்திருக்கிறது. அதிலும் குறிப்பாக பனி படர்ந்த பகுதிகளின் காட்சிகளில் ஒளிப்பதிவாளரும், இசையமைப்பாளரும் இணைந்து கரம் கோர்த்து உழைத்திருப்பது பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்துகிறது.

நாயகனாக அசோக் செல்வன், அவருடைய நிஜ கதாபாத்திரத்திலும், அவர் வாசிக்கும் கதையின் கற்பனை கதாபாத்திரத்திலும் பொருத்தமாக நடித்திருக்கிறார். கற்பனை கதையில் அசோக் செல்வன் வரும் காட்சிகள், இயக்குநர் கிருத்திகா உதயநிதியின் இயக்கத்தில் விஜய் அண்டனி நடிப்பில் வெளியான 'காளி' படத்தினை நினைவுப்படுத்தினாலும், இயக்குநர் இரண்டாம் பாதியில் சுவாரசியமான கதாபாத்திரங்களின் மூலம் ரசிகர்களை மகிழ்ச்சி அடையவே செய்கிறார்.

இன்றைய இளைய தலைமுறையினர் தங்களுக்கென சில கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டு, மற்றவர்களைப் பற்றி கவலைப்படாமல், வாழ்க்கையைப் பற்றிய புரிதலும் இல்லாமல் இருப்பது போல்.. கதாநாயக கதாபாத்திரத்தை உருவாக்கி, அவர்களின் போக்கிலேயே பயணிக்க வைத்து வாழ்க்கை என்றால் பொருள் பொதிந்தது.. சமரச உடன்பாட்டுக்கு உரியது..நம்பிக்கையுடன் எதிர்கொள்ளவேண்டும்.. என நேர் நிலையான புரிதல்களை உணர்த்தியிருப்பது பாராட்டுக்குரியது.

நடிகைகளின் அபர்ணா பாலமுரளி, ரீத்து வர்மா, சிவாத்மிகா ராஜசேகர் என்ற வரிசையில் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கிறார்கள். பாடல்கள் அனைத்தும் பட மாளிகையில் படத்தை பார்க்கும் ரசிகர்களின் மனநிலையை திசை திருப்பாமல் கதையுடன் பயணிக்க வைப்பதால் ரசிக்க இயலுகிறது.

நித்தம் ஒரு வானம் - புத்தம் புது காலை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35