தென் ஆபிரிக்காவை வீழ்த்தி வரலாறு படைத்தது நெதர்லாந்து : அரை இறுதியில் இந்தியா

Published By: Vishnu

06 Nov, 2022 | 10:36 AM
image

(நெவில் அன்தனி)

அடிலெய்ட் ஓவல் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (06) நடைபெற்ற ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண குழு 2 சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டியில் தென் ஆபிரிக்காவை 13 ஓட்டங்களால் வெற்றிகொண்டு நெதர்லாந்து வரலாறு படைத்தது.

அத்துடன் தென் ஆபிரிக்காவின் அரை இறுதி கனவை கலைத்து உலகக் கிண்ணத்திலிருந்து நொக்-அவுட் செய்தது.

 இந்தப் போட்டியில் தென் ஆபிரிக்கா தோல்வி அடைந்ததால் மூன்றாவது அணியாக அரை இறுதியில் விளையாட இந்தியா தகுதிபெற்றுக்கொண்டது.

அத்துடன் பாகிஸ்தானுக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான  இன்றையபோட்டியில் வெற்றிபெறும் அணி நான்காவது அணியாக அரை இறுதியில் விளையாட தகதிபெறும்.  

இருவகை சர்வதேச மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் தென் ஆபிரிக்காவை நெதர்லாந்து வெற்றிகொண்டது இதுவே முதல் தடவையாகும்.

துடுப்பாட்டம், பந்துவீச்சு, களத்தடுப்பு ஆகிய மூன்று துறைகளிலும் தென் ஆபிரிக்காவை விஞ்சும் வகையில் திறமையை வெளிப்படுத்தி நம்பமுடியாத வெற்றியை நெதர்லாந்து பதிவுசெய்தது.

கொலின் அக்கர்மனின் ஆட்டமிழக்காத துடுப்பாட்டம், ப்றெண்டன் க்ளோவர், ப்ரெட் க்ளாசென், பாஸ் டி லீ ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சு என்பன நெதர்லாந்தின் வெற்றியில் பிரதான பங்காற்றின.

இப் போட்டியில் வெற்றிபெற்றால் அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றுவிடலாம் என்ற எதிர்பார்ப்புடன் களம் இறங்கிய தென் ஆபிரிக்காவுக்கு எதுவும் சரியாக அமையவில்லை.

நெதர்லாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 150 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 145 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

அதிரடியாக ஓட்டங்களைப் பெற முயற்சித்த தென் ஆபிரிக்கா சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்த வண்ணம் இருந்தது.

குவின்டன் டி கொக் (13), அணித் தலைவர் டெம்பா பவுமா (20), ரைலி ரூசோவ் (25), ஏய்டன் மார்க்ராம் (17), டேவிட் மில்லர் (17), வெய்ன் பார்னல் (0), ஹெய்ரிச் க்ளாசென் (21), உபாதையுடன் சிரமத்திற்கு மத்தியில் துடுப்பெடுத்தாடிய கேஷவ் மகாராஜ் (13) ஆகியோரினால் கணிசமான ஓட்டங்களைப் பெறமுடியாமல் போனது. இது தென் ஆபிரிக்காவுக்கு நெருக்கடியைக் கொடுத்தது.

கெகிசோ ரபாடா 9 ஓட்டங்களுடனும் அன்ரிச் நோக்கியா 4 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

தெநர்லாந்து பந்துவீச்சில் ப்றெண்டன் க்ளோவர் 9 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ப்றெட் க்ளாசென் 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பாஸ் டி லீட் 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பறறினர்.

முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட நெதர்லாந்து முன்வரிசை வீரர்களின் திறமையான துடுப்பாட்டங்களின் உதவியுடன் 20 ஓவர்களில் 4 விக்கெட்களை மட்டும் இழந்து 158 ஓட்டங்களைப் பெற்றது.

ஸ்டெஃபான் மைபேர்க், மெக்ஸ் ஓ'டவ்ட் ஆகிய இருவரும் நிதானம் கலந்த வேகத்துடன் துடுப்பெடுத்தாடி 58 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

மைபேர்க் 7 பவுண்டறிகளுடன்  37 ஓட்டங்களைப் பெற்றார்.

அதன் பின்னர் இணைப்பாட்டங்கள் பெரிய அளவில் இடம்பெறவில்லை.

மொத்த எண்ணிக்கை 97 ஓட்டங்களாக இருந்தபோது மெக்ஸ் ஓ'டவ்ட் 29 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார்.

டொம் கூப்பர் 35 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து பாஸ் டி லீட் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழந்தனர்.

எனினும் கொலின் அக்கர்மனும் அணித் தலைவர் ஸ்கொட் எட்வேர்ட்ஸும் பிரிக்கப்படாத 5 ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 158 ஓட்டங்களாக உயர்த்தினர்.

கொலின் அக்கர்மன் 26 பந்துகளில் 3 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 41 ஓட்டங்களுடனும் ஸ்கொட் எட்வேர்ட்ஸ் 12 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

தென் ஆபிரிக்க பந்துவீச்சில் கேஷவ் மகாராஜ் 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

உலகத் தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களான வெய்ன் பார்னல், கெகிசோ ரபாடா, லுங்கி நிகிடி ஆகியோரினால் விக்கெட்களை வீழ்த்த முடியாமல் போனதுடன் மூவரும் 30 ஓட்டங்களக்கு மேல் கொடுத்திருந்தனர்.

ஆட்டநாயகன்: கொலின் அக்கர்மன் 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59
news-image

இத்தாலி மெய்வல்லுநர் போட்டியில் யுப்புன் அபேகோனுக்கு...

2024-04-15 16:16:50
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக் டென்னிஸில் பங்குபற்றி...

2024-04-15 13:06:04
news-image

மதீஷவின் பந்துவீச்சில் மண்டியிட்டது மும்பை : ...

2024-04-15 13:24:55
news-image

ரி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை முன்னோடி...

2024-04-14 22:18:48
news-image

பில் சோல்ட், மிச்செல் ஸ்டாக் பிரகாசிக்க,...

2024-04-14 19:59:07
news-image

வுல்வாட் அபார சதம் : இலங்கையை...

2024-04-14 09:35:43
news-image

கடைசி 2 ஓவர்களில் ஹெட்மயரின் அதிரடியால்...

2024-04-13 23:48:46
news-image

இலங்கையில் ICC கிரிக்கெட் உரிமைகள் 2025...

2024-04-13 07:06:22