நல்லிணக்க முயற்சிகளிற்கு முன்னுரிமை அளிக்கும் நடவடிக்கைகளில் ஜனாதிபதி

Published By: Rajeeban

06 Nov, 2022 | 07:28 AM
image

sundaytimes.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இனநல்லிணக்கத்திற்கான பலமுனை திட்டங்களிற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.

இந்த திசையை நோக்கி முதல் முயற்சியாக நல்லிணக்க திட்டம் எவ்வாறானதாகயிருக்கவேண்டும் என்பதற்கான பரந்த வரையறைகளை ஒன்றிணைப்பதற்கான அமைச்சர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இதுவே பின்னர் அனைத்து பங்குதாரர்களுடனான கலந்துரையாடலிற்கான அடிப்படையாக காணப்படும்.

ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் கீழ் பிரதமர் வெளிவிவகார அமைச்சர் நீதியமைச்சர் ஆகியோரை உள்ளடக்கிய குழு இந்த நோக்கத்தை நோக்கி செயற்படும்.

ஓவ்வொரு வாரமும் அமைச்சரவை சந்திப்பின் பின்னர் இந்த குழு சந்திக்கும்.

ஜனாதிபதி தலைமையிலான இந்த குழுவினர் எதிர்வரும் வாரங்களில் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பான முக்கிய விடயங்கள் குறித்து கவனம் செலுத்தவுள்ளனர்.

ஜனாதிபதி எகிப்திலிருந்து  நாடு திரும்பிய பின்னர்  இந்த குழு தனது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்.

நல்லிணக்க முயற்சிகளை கையாள்வதற்கான தனியான பிரிவு ஜனாதிபதி செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ளதன் மூலம் புதிய நல்லிணக்க திட்டத்திற்கு அரசாங்கம் வழங்கியுள்ள முன்னுரிமை முக்கியத்துவம் புலனாகியுள்ளது.

வடமாகாண ஆளுநரின் செயலாளராக பணியாற்றிய எல் இளஙகோவன் இந்த குழுவிற்கு தலைமை தாங்குவார்.

அரசாங்கம வவுனியாவில் அலுவலகம் ஒன்றையும் அமைக்கும் , அமைச்சர்கள் குழுவிற்கு அவசியமான மக்கள் கருத்துக்களை பெறுவதை இலகுவாக்குவதே இந்த அலுவலகத்தின் நோக்கம்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க இனநல்லிணக்கம் தொடர்பான விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதியை சந்திப்பதற்கான அனுமதியை கோரி கடிதம் எழுதியவேளை இந்த நடவடிக்கைகள் ஆரம்பமாகிவிட்டன.

இனநல்லிணக்கத்திற்கான பரந்துபட்ட திட்டமொன்றை உருவாக்கும் தனது முயற்சியின் போது அரசாங்கம் பல்வேறு பட்ட விடயங்களில் கவனம் செலுத்தவேண்டியிருக்கும்,ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 51 வது அமர்வில் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டப்பட்ட விடயங்கள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தவேண்டியிருக்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அக்குராணை கிராமமும் பொது மக்கள் எதிர்கொள்ளும்...

2024-03-29 17:17:02
news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48