ரஷ்யாவுக்கு ட்ரோன்களை விநியோகித்ததாக ஈரான் ஒப்புதல்

Published By: Sethu

05 Nov, 2022 | 06:51 PM
image

ரஷ்யாவுக்கு ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) தான் அனுப்பியதாக ஈரான் முதல் தடவையாக இன்று ஒப்புக்கொண்டுள்ளது. எனினும், யுக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு முன்னரே அவை அனுப்பப்பட்டவை என ஈரான் கூறியுள்ளது.

யுக்ரைன் யுத்தத்துக்கு பல மாதங்களுக்கு முன்னர், மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான ஆளில்லா விhமனங்களை ரஷ்யாவுக்கு நாம் விநியோகித்தோம் என ஈரானிய வெளிவிவகார அமைச்சர் ஹொசைய்ன் அமீர் அப்தோலாஹியன் கூறினார் என ஈரானின் ஐ.ஆர்.என்.ஏ. செய்திச் சேவை தெரிவித்தது.

ஈரானில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்களை ரஷ்யா பயன்படுத்தியதாக யுக்ரைனும் அதன் மேற்குலக நட்பு நாடுகளும் கூறிவந்தன. ஆனால் இதை ஈரான் நிராகரித்து வந்தது.

ஈரானில் தயாரிக்கப்பட்ட சுமார் 400 ட்ரோன்களை யுக்ரைனில் பொதுமக்களுக்கு எதிராக ரஷ்யா பயன்படுத்துகிறது எனவும், மேலும் சுமார் 2000 ட்ரோன்களை வாங்குவதற்கு ரஷ்யா கட்டளை கொடுத்துள்ளது எனவும் யுக்ரைன் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47