விபத்தில் சிக்கி உயிரிழந்த யுவதி நாவலப்பிட்டியைச் சேர்ந்த சித்த மருத்துவபீடம் மாணவி : வாகனத்தை அகற்றும் பணியில் இராணுவம்

Published By: Digital Desk 5

05 Nov, 2022 | 12:10 PM
image

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இருந்து யாழ் மாநகர் ஊடாக கொழும்பு நோக்கி சென்ற அதி சொகுசு பஸ் கட்டுப்பாட்டை இழந்து பாலத்துடன் மோதுண்டு இரவு 12.15 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்த யுவதி நாவலப்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

யாழ். பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பீடத்தில் கல்வி பயின்ற, 23 வயதான ராமகிருஷ்ணன் சயாகரி என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

சடலம் வவுனியா பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த விபத்தில் யாழ். உடுப்பிட்டியைச் சேர்ந்த பஸ்ஸின் சாரதியான சிவபாலன் சிவரூபன் உயிரிழந்துள்ளார்.

பஸ் சாரதியான உடுப்பிட்டியை சேர்ந்த சிவரூபன் கிராமத்தின் பல்வேறு சமூக, சமய செயற்பாடுகளிலும் துடிப்புடன் முன்னின்று செயற்படுபவராவார். சமூக செயற்பாடுகளூடாக கிராம மக்களின் பேரன்புக்கு உரியவராவார். அத்துடன் கடின உழைப்பாளியுமாவார். இவரின் திடீர் மறைவு உடுப்பிட்டி வாழ் மக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை பேருந்தில் பயணித்த 16 பேர் காயமடைந்த நிலையில் நால்வர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், விபத்துக்குளான அதி சொகுசு பஸ்ஸை மீட்கும் பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ள நிலையில் ஏ9 வீதி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற அதி சொகுசு பஸ் வவுனியா, நொச்சிமோட்டைப் பகுதியில் இன்று அதிகாலை 12.15 அளவில் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து பாலத்துடன் மோதி தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

குறித்த பேருந்தை தொடர்ந்து வந்த மற்றுமொரு சொகுசு பேருந்து வீதியை விட்டு விலகிய நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான அதி சொகுசு பேருந்தினை மீட்கும் பணி பாரிய பாரந்தூக்கியுடன் துணையுடன் இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.  

இதன்காரணமாக ஏ9 வீதி போக்குவரத்துக்கள் பாதிப்படைந்துள்ளதுடன், ஏ9 வீதியில் பாலத்தின் இரண்டு மருங்கிலும் ஒரு கிலோமீற்றர் நீளத்திற்கு வாகனங்கள் காத்து நிற்பதையும் அவதானிக்க முடிந்தது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:02:42
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32