குருணாகல் பரிகம  பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர். 

மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த நபர் எதிரே வந்த முச்சக்கர வண்டியுடன் மோதியுள்ளார்.

இதனையடுத்து முச்சக்கர வண்டி வேக கட்டுபாட்டை இழந்து அருகில் இருந்த மதிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த 12 வயது சிறுவன் உட்பட மூன்று பேர் படு காயமடைந்து கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்